உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாரதமாதா உருவம் பொறித்த சிறப்பு நாணயம்!

பாரதமாதா உருவம் பொறித்த சிறப்பு நாணயம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட சிறப்பு தபால் தலையில் பாரத மாதா சிலை இடம்பெற்றுள்ளது. இந்திய நாணயங்களில் பாரத மாதா புகைப்படம் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும்.ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம், 1925ல் விஜயதசமி நன்னாளில் மஹாராஷ்டிராவின் நாக்பூரில் துவங்கப்பட்டது. இந்த இயக்கத்தை, டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் நிறுவினார்.இந்த மாபெரும் இயக்கத்தின் நுாற்றாண்டு விழா, டில்லியில் நேற்று கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தேசத்தின் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு, ஊடுருவல் பிரச்னை மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற சித்தாந்தத்தில் தான் தேசத்தின் ஆன்மா புதைந்து இருக்கிறது. இந்த சித்தாந்தம் உடைக்கப்பட்டால் தேசம் பலவீனமாகி விடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும் இந்த விழாவில், சிறப்பு நாணயம் மற்றும் அஞ்சல்தலையை பிரதமர் வெளியிட்டார்.ரூ.100 மதிப்பு கொண்ட நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசிய சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில்,சிம்ம வாகனத்தில் வரத முத்திரையுடன் பாரத மாதா இருக்கும் படமும், அவரை ஆர்எஸ்எஸ் சேவகர்கள் மரியாதையுடன் வணங்குவது போன்ற உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.இந்த நாணயத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா என்ற வாசகம் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும்,' அனைத்தும் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கே அனைத்தும் சொந்தம். என்னுடைய எதுவும் இல்லை' என பொருள்படும் ' Rashtriya Swaha, Idam Rashtraya, Idam Na Mama' என்ற வாசகமும் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு துவங்கப்பட்ட 1925 மற்றும் தற்போதைய 2025ம் ஆண்டும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு நாணயத்துடன் வெளியிடப்பட்ட அஞ்சல் தலையிலும், '1963ம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது நடந்த அணிவகுப்பில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பங்கேற்ற புகைப்படம்' இடம்பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sundararajan narayanan
அக் 03, 2025 08:44

ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் படி தபால் நிலையங்களில் விற்கப்படவேண்டும்.


மணி முருகன்
அக் 03, 2025 00:18

அருமை வரவேற்கிறேன் பல சேவா சங்கங்கள் இருந்தாலும் வடநாட்டில் ஊழல் கட்சிகள் பல தரப்பட்ட மக்கள் இருந்தப் போதும் தங்கள் வேற்றுமையை காட்டாமல் சேவையை மட்டும் செய்யும் ஒரு அமைப்பு என்பதை மறுக்க மறைக்க முடியாது வாழ்த்துக்கள்


தமிழ்வேள்
அக் 02, 2025 21:10

பாரத ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை நீக்கிவிட்டு பாரதமாதா & நேதாஜி படங்கள் இடம்பெறச் செய்ய வேண்டும்....


joe
அக் 02, 2025 19:39

பிரதமர் மோடி அய்யா அவர்களின் அறிவுரை அனைத்து அரசியல் வாதிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே .நன்றி .நன்றி


Shankar
அக் 02, 2025 17:35

ஓங்குக RSS புகழ், வளர்க்க RSS வீரம், மங்களகரமான பாரத மாதா உன்னை பணிவுடன் வணங்குகிறோம். எங்களை நோக்கிய எதிரிகளை நாங்கள் சென்று அழிக்கவும், தேசத்தை புறம்பேசும் துரோகிகளையும் தீவிரங்களையும் துடைத்தெறிய நாங்கள் கொண்டுள்ள அதீத வீரம் எல்லாம் நீயே பாரத மாதா உனக்கு எப்போதும் வெற்றி உனக்கு எப்போதும் வெற்றி உனக்கு எப்போதும் வெற்றி