போலீஸ் நினைவு தினம்: பாலக்காட்டில் அணிவகுப்பு
பாலக்காடு : போலீஸ் நினைவு தினத்தை ஒட்டி, பாலக்காட்டில் போலீஸ் நினைவு அணி வகுப்பு நடந்தது.கேரளாவில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தம் வகையில், போலீஸ் நினைவு தின அணிவகுப்பு ஆண்டு தோறும், அக். 21ம் தேதி நடக்கிறது. நடப்பாண்டு நினைவு தின அணிவகுப்பு நேற்று நடந்தது. பாலக்காடு கோட்டை மைதானத்தில் நேற்று நடந்த போலீஸ் நினைவு தின நிகழ்வை மாவட்ட எஸ்.பி., ஆனந்த் துவக்கி வைத்தார். முன்னதாக, நினைவு மண்டபத்தில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு, எஸ்.பி., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து நினைவு தின அணிவகுப்பு நடந்தது.