உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணப்பையை பறித்து சென்ற போலீஸ் எஸ்.ஐ.,சஸ்பெண்ட்

பணப்பையை பறித்து சென்ற போலீஸ் எஸ்.ஐ.,சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: வீடு வீடாக சென்று பழைய துணி மற்றும் பொருட்களை வாங்கி ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு வழங்கி வந்தவரின் பணப்பையை பறித்து சென்ற போலீஸ் எஸ்.ஐ., பிரதீப் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய் 28. வீடு வீடாகச் சென்று பழைய துணி மற்றும் பொருட்களை வாங்கி ஆதரவற்றோர் காப்பகத்துக்கு வழங்கி வருகிறார். மார்ச் 31 ல் இவர் விழிஞ்ஞம் பகுதியில் டூவீலரில் அமர்ந்து இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த திருவனந்தபுரம் பட்டம் போக்குவரத்து உதவி ஆணையர் அலுவலக எஸ்.ஐ., பிரதீப் விஜயிடம் விசாரணை நடத்தினார். அவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பழைய துணி மற்றும் பொருட்களை வாங்க வந்திருப்பதாக கூறினார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது திடீரென விஜயிடம் இருந்த பணப்பையை வாங்கி கொண்டு எஸ்.ஐ., பைக்கில் சென்றார். இதுகுறித்து விஜய் விழிஞ்ஞம் போலீசில் செய்த புகாரில் ரூ.5 ஆயிரம் வைத்திருந்த பணப்பையை எஸ்.ஐ., பிரதீப் எடுத்து சென்றதாக குறிப்பிட்டார்.இதுகுறித்து விசாரணை நடந்த நிலையில் எஸ்.ஐ., மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்து திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் தாம்சன் ஜோஸ் உத்தரவிட்டார். எஸ்.ஐ., மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kanns
ஏப் 05, 2025 12:45

Good Work by Superior Officers Doing Justice to their Jobs, People& Nation rather than getting Share of Commissions from Power Misusing Subordinate Officials esp Police-Judges


SIVA
ஏப் 05, 2025 10:50

கம்யுனுனிசம் என்றால் எல்லாரும் சமம் என்று அர்த்தம் , அதுக்காக போலீஸ் இப்படி வழிப்பறி செய்து இருக்க வேண்டாம் , அவர் மீது உடனடியாக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்தது நல்லது ...


Yes your honor
ஏப் 05, 2025 08:48

போலீஸ் என்றால் இதெல்லாம் சகஜம் தானே. இவர்கள் திருந்த வேண்டும் என்றால் ஒரேவழி, முதல் நிலை முதல் கடை நிலை பிசி வரை அனைவருக்கும் குன்னுர் அருவெங்காடு மிலிட்டரி சென்டரில் கட்டாயம் இரண்டு வருடங்கள் அதிதீவிர பயிற்சி அளிக்க வேண்டும். டூட்டியில் தப்பு செய்ய நினைத்தாலே வயிறு கடமுடக்க வேண்டும். இல்லையேல் போலீசார் திருந்த மாட்டார்கள்.


அப்பாவி
ஏப் 05, 2025 08:15

திராவிடனுங்கதான் போலீசா இருக்காய்ங்க. நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும் கோவாலு


Pandi Muni
ஏப் 05, 2025 07:50

திராவிட கும்பல்கிட்ட ட்ரெயினிங் எடுத்திருப்பான் போலருக்கு


KRISHNAN R
ஏப் 05, 2025 07:32

சரி... அங்கே கொஞ்சம் கம்மியா இருந்துச்சு சொன்னாங்க... இல்லை போல


Kasimani Baskaran
ஏப் 05, 2025 07:20

தமிழக போலீசுக்கு இணையாக இருப்பார்கள் போல...


சுராகோ
ஏப் 05, 2025 07:13

ஒவ்வொரு லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளும் வழிபறிகொள்ளையர்களே.


புதிய வீடியோ