உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போக்சோ வழக்கில் எடியூரப்பாவிற்கு மீண்டும் போலீஸ் சம்மன்

போக்சோ வழக்கில் எடியூரப்பாவிற்கு மீண்டும் போலீஸ் சம்மன்

பெங்களூரு: பாலியல் புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு போலீசார் இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.கடந்த பிப்ரவரியில் கர்நாடகா பா.ஜ. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் நேரில் சந்தித்து உதவி கேட்டுள்ளார். அப்போது தன் மகளுக்கு எடியூரப்பா பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக பெங்களூரு சதாசிவ நகர் போலீஸ் ஸ்டேசனில், அப்பெண் புகார் அளித்தார்.போக்சோ சட்டத்தின் கீழ் எடியூரப்பா மீது போலீசார் மார்ச்சில் வழக்குப்பதிவு செய்தனர். லோக்சபா தேர்தல் நெருங்க உள்ளதால் என் மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு நிதியுதவி அளித்தேன் என தன் மீதான புகாரை மறுத்தார்.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக எடியூரப்பா ஏற்கனவே மூன்று முறை போலீஸ் முன் ஆஜரான நிலையில் மீண்டும் ஆஜராக சதாசிவ நகர் போலீஸ் நிலைய போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GMM
ஜூன் 13, 2024 07:06

பாலியல், போக்ஸோ, தீண்டாமை வழக்குகள் இந்த காலத்திற்கு தேவையில்லை? பாலியல் புகாரில் ஒரு பெண் தந்தை, கணவர், மகன் சார்ந்து மட்டும் வாழ்ந்து இருக்க வேண்டும். ஒரு ஆண் உறவினருடன், நண்பருடன் சென்றால் குற்றம் நிகழாது.? பெண்கள் தனியாக ஏன் சந்திக்க, செல்ல வேண்டும்? சட்டம் தவறாக அதிகம் பயன்படுத்த பட்டு வருகிறது.?


Kasimani Baskaran
ஜூன் 12, 2024 22:32

தீம்க்காவை காப்பியடித்தால் காங்கிரஸ் விரைவில் காணாமல்போகும். அதுவும் இரட்டை முதல்வர்கள் ஆட்சியில் காமெடிகளுக்கு பஞ்சமில்லை.


sankaranarayanan
ஜூன் 12, 2024 21:45

பொய் புகார் கொடுத்தவர்களை வெளியே விடுவித்தால் ல் அரசின் நேரத்தை வீணாக்கியதற்காக அவர்களுக்கும் கடும்தண்டனை கொடுக்க வேண்டும் அப்போதான் மக்கள் மத்தியில பொய் குற்றங்கள் இனி நிகழாமல் இருக்கும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ