| ADDED : பிப் 12, 2024 06:36 AM
சி.எம்., ஆதரவாளரான ப.பேட்டைக்காரரை எதிர்த்து, 2018 அசெம்பிளி தேர்தலில் டில்லியில் இருந்து ப.பேட்டைக்கு, பி.எம்., பிரசாரத்துக்கு வந்தும் அவரை தோற்கடிக்க முடியாமல் போனது.அந்த தேர்தலில் சொகுசு விடுதியில் கத்தை கத்தையா பணம் இருந்ததை தேர்தல் ஆபீசர்கள் பறிமுதல் செய்தும் கூட அவரை தோற்கடிக்க முடியல. மூன்று முறை எம்.எல்.ஏ., ஆனதால், 'மினிஸ்டர் போஸ்ட்' வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் எஸ்.சி., இட ஒதுக்கீட்டில் நான்கு சீனியர்கள் பதவி பெற்றதால், இவரது குருநாதர், பொறுமையாக இருக்குமாறு சொன்னாராம்.அது மட்டுமின்றி, நல்ல வசதியான வாரியத் தலைவர் பதவியை வழங்கி, அவர் மனசை குளிர வெச்சிட்டாங்க. இவரு 'சி.எம்.,' கோஷ்டி என்பதால, 'டி.சி.எம்.,' இடத்தில் இணக்கமாக இல்லையாம்.பெரிய தேர்தலில் கோலார் தொகுதிக்கு டி.சி.எம்., கோஷ்டியை சேர்ந்தவருக்கு தான் சீட் கிடைக்கப் போகுதாம். இதனால், குருநாதரின் கிரீன் சிக்னல் இல்லாமல் ப.பேட்டையில் வேட்டைக்கு போக மாட்டாராம்.இவரின் ஆட்டம் எப்படி இருக்க போகுதோ. ஏன்னா, கடந்த தேர்தலில் இவர் 'தப்பாட்டம்' ஆடியதா அவர் மறந்திருக்கவா செய்வார்.மாநிலத்தின் பெருந்தலைகள் இடையேயான போட்டி அரசியலில், கோலார் லோக்சபா தேர்தலிலும் பிரதிபலிப்பு இருக்க போகுதோ. கை கட்சிக்குள் குழப்பம் தொடருவதால் எதிர்க்கட்சிக்கு கொண்டாட்டம் தான்.