உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமலை கோவில் வளாகத்தில் அரசியல் பேச தடை

திருமலை கோவில் வளாகத்தில் அரசியல் பேச தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகத்தில் அரசியல் மற்றும் வெறுப்பு கருத்துகளை பேசுவதற்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.திருமலை ஏழுமலையான் கோவிலில் வழிபட ஆந்திராவிலிருந்து மட்டுமின்றி, மற்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இதில், அரசியல் மற்றும் திரைப் பிரபலங்களும் அடங்குவர்.அவ்வாறு வரும் பிரபலங்கள், தரிசனத்துக்கு பின் கோவில் வளாகத்தில், செய்தியாளர்களை சந்தித்து பேசுவர். சமீபத்தில், இதுபோல் பிரபலங்கள் அளித்த பேட்டி சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், கோவில் வளாகத்தில் இதுபோன்ற பேட்டி அளிப்போர், அரசியல் மற்றும் வெறுப்பு கருத்துகளை கூற தடை விதிக்கப்பட்டுள்ளதாக, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.ஆன்மிக தலத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதை தடுக்க, ஏற்கனவே இந்த விதிமுறை அமலில் உள்ள நிலையில், பலர் இதை பின்பற்றுவது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தடை உத்தரவை, அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
டிச 02, 2024 14:09

ஆனா அரசியல்வாதிகள் அறங்காவலர்களாகலாம்.


Ramesh Sargam
டிச 02, 2024 12:01

சிறிது காலத்திற்கு அரசியல்வாதிகள் யாரும் வரக்கூடாது என்று ஒரு தடை விதிக்கவேண்டும். வந்தாலும் பொதுமனிதராக வரவேண்டும், அரசியல் பந்தா எதுவும் இருக்கக்கூடாது என்றும் கூறவேண்டும். மேலும் இந்த VIP, VVIP தரிசனங்களை முற்றிலும் நிறுத்தவேண்டும். கோவிலில் எதற்கய்யா அப்படிப்பட்ட VIP. VVIP தரிசனங்கள்? கடவுள் முன் எல்லோரும் சமம் இல்லையா?


அப்பாவி
டிச 02, 2024 06:10

அரசியல் வாதிகள், நடிகர்கள் யாருக்கும் பெசல் பர்மிஷன் கிடையாதுன்னு போடுவீங்களா? உடனே பூர்ணகும்பத்தை தூக்கிட்டு வரவேற்க கெளம்பிருவீங்களே.


Ramesh Sargam
டிச 02, 2024 12:24

அதானே... சாமிக்கு முன்பு எல்லோரும் சமம் இல்லையா? சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம். ஆனால் நீங்கள் சட்டத்தை மதிப்பதில்லை. குறைந்தபட்சம் கடவுளையாவது மதிக்கவேண்டும் இல்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை