உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக அமலாகும் புதிய சீர்திருத்தங்கள்

பீஹார் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக அமலாகும் புதிய சீர்திருத்தங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் 17 புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் பல ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன. மற்றவை தேர்தலின் போது அமல்படுத்தப்பட உள்ளது என தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார்.தேர்தல் கமிஷனின் சில சீர்திருத்த நடவடிக்கைகள்:

ஓட்டுச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள்

பீஹாரில் முதல்முறையாக ஒரு ஓட்டுச்சாவடியில் 1,200 வாக்காளர்கள் என்ற முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஓட்டுப்போடுவது எளிதாக இருப்பதுடன், நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை இருக்காது. முன்பு ஒரு ஓட்டுச்சாவடிக்கு 1,500 வாக்காளர்கள் இருந்த நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்பணி காரணமாக இந்த எண்ணிக்கை 1,200 ஆக குறைய உள்ளது. இதனால், பீஹாரில் தற்போதுள்ள 77,895 ஓட்டுச்சாவடிகளுடன் புதிதாக 12,817 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

ஓட்டுச்சாவடிகளில் கலர் படங்கள்

பீஹாரில் முதல்முறையாக மின்னணு ஓட்டு இயந்திரங்களில் எழுத்துக்கள் மற்றும் சீரியல் எண்கள் பெரிதாக பொறிக்கப்பட உள்ளதுடன், அதில் வேட்பாளர்களின் புகைப்படம் வண்ணப்படமாக ஒட்டப்பட உள்ளது. இதற்கு முன்னர், கருப்பு வெள்ளையில் இருந்த புகைப்படங்களால் சில வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தேர்தல் கமிஷனர் கூறியுள்ளார்.

அதிகாரிகளிடம் அடையாள அட்டை

பூத் மட்டத்திலான அதிகாரிகள் தங்களது அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை வைத்து இருப்பார்கள். இதன் மூலம், வாக்காளர்கள் அவர்களை அடையாளம் கண்டு எளிதில் அணுக முடியும்.

மொபைல்போன்கள் வைக்க தனி அறை

ஓட்டுப்போட வரும் வாக்காளர்கள் தங்களது மொபைல்போன்களை வைக்க தனி அறை ஏற்படுத்தப்படும். இது பீஹார் முழுவதும் அமல்படுத்தப்படும் என ஞானேஷ்குமார் கூறியுள்ளார்.

இணையவழி ஒளிபரப்பு

தேர்தலின் போது வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக பீஹார் முழுவதும் அனைத்து ஓட்டுச்சாவடிகளும் வெப் கேமரா பொருத்தப்படும்.

ஓட்டு எண்ணிக்கையில் தெளிவு

ஞானேஷ்குமார் கூறுகையில், முன்பு ஓட்டுகள் எண்ணப்படும் போது, தபால் ஓட்டு எண்ணிக்கையில் பிரச்னை ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு மின்னணு ஓட்டு இயந்திரங்கள் எண்ணி முடிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும். தற்போது, மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளின் கடைசி இரண்டு சுற்று எண்ணப்படுவதற்கு முன்னர், தபால் ஓட்டுகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட வேண்டும் என்றார். பீஹாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்த சீர்திருத்தங்களை அமல்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

c.mohanraj raj
அக் 06, 2025 09:02

ஓ அதனால்தான் தமிழக முதல்வர் உளறிக் கொண்டிருக்கின்றார் போல இங்கேயும் சீர்திருத்தம் வந்தால் இவர்கள் கள்ள ஓட்டு கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு விடும்


Iyer
அக் 06, 2025 04:22

வோட்டுப்போடாதவர்களை கீழ்க்கண்டபடி தண்டிக்கலாம் : 1.. அரசுப்பணியில் இருந்தால் பணிநீக்கம் செய்யலாம். 2. தனியார் பணியில் உள்ளவர்கள் - வோட்டுப்போடுவதை அந்த MANAGEMENT பொறுப்பில் விட்டுவிடவேண்டும். வோட்டுப்போடாத ஒவ்வொருவருக்கும் 100000 அபராதம் கட்டச்சொல்லவேண்டும். 3. வோட்டுப்போடாதவர்களுக்கு - RATION மற்றும் சலுகை நிறுத்தப்படவேண்டும்.


Iyer
அக் 06, 2025 04:17

""பாரதத்தின் பிரஜை"" அல்லாத ஒருவரும் வோட்டு போடமுடியாதபடி செய்தால் தான் உண்மையான சீர்திருத்தம். 100% சதவிகிதம் ஓட்டுப்பதிவு ஆனால் தான் உண்மையான சீர்திருத்தம்.


Prasath
அக் 05, 2025 23:34

அளக்க ஒரு அளவில்லை போல


Venugopal S
அக் 05, 2025 22:41

இந்த சீர்திருத்தங்களுக்கு காரணம் மத்திய பாஜக அரசு அல்ல, ராகுல் காந்தியின் தீவிர முயற்சி தான் காரணம்!


ஆரூர் ரங்
அக் 06, 2025 12:52

எழுத்து பூர்வமாக புகாரளிக்க அஞ்சுகின்ற ராகுல் சாதனை? உங்களுக்கே சிரிப்பாக இல்லை?


GMM
அக் 05, 2025 21:21

ஆதார் இருப்பிட, பிறப்பு சான்று சரிபார்க்காத அடையாள அட்டை என்கிறது தேர்தல் ஆணையம். உச்ச நீதிபதி 12 வது ஆவணம் என்று பொடி வைத்து ஆக்கி விட்டார்? தேர்தலில் ஆதார் அடிப்படையில் இடம் பெயர்ந்த, இறந்த, கள்ள குடியேறிகள் ஓட்டு போட, தேர்தல் முடிந்த பிறகு போலிகள் அடையாளப்படுத்த முடிவில் குழப்பம் ஏற்படும். பிரச்சனையை தேர்தல் ஆணையம் எதிர் கொள்ள வேண்டி வரும். ?


ஜெய்ஹிந்த்புரம்
அக் 05, 2025 20:59

பீஹார் முழுவதும் அனைத்து ஓட்டுச்சாவடிகளும் வெப் கேமரா பொருத்தப்படும். - ஆனால் வாக்குச்சாவடி சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை தரமாட்டோம்


Balakumar V
அக் 05, 2025 20:40

ஓட்டு திருட்டு என்னும் புலம்பல் எப்படியும் கேட்கப் போகிறது.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 05, 2025 20:34

நீங்கள் திருத்தங்கள் சீர் திருத்தங்கள் என்று எவ்வளவு செய்தாலும் தேர்தல் நடக்கும் தேதிக்கும் வாக்கு எண்ணும் தேதிக்கும் உள்ள இடைவெளியை குறைக்காதவரை நம்பிக்கையின்மை தொடரத்தான் செய்யும். அடுத்து தேர்தல் முடிந்த அன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அறிவிக்கவேண்டும்.


சசிக்குமார் திருப்பூர்
அக் 05, 2025 20:26

உமமை போனற ஆட்கள் இருக்கும் வரை காங்கிரஸ் திமுகவுக்கு பரம்பரை வாரிசுகளுக்கு கொண்டாட்டமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை