உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம்ம ஊர் தமிழ் மக்கள் குழுவின் பொங்கல் விழா இன்று நிறைவு

நம்ம ஊர் தமிழ் மக்கள் குழுவின் பொங்கல் விழா இன்று நிறைவு

பெங்களூரு : 'நம்ம ஊர் தமிழ் மக்கள் குழு' சார்பில் கொண்டாடப்படும் பொங்கல் விழா இன்று கோலாகலத்துடன் நிறைவுபெறுகிறது.தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாளை நம்ம ஊர் தமிழ் மக்கள் குழு சார்பில் இந்தாண்டு மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.பெங்களூரு பிலால் நகர் பில்லண்ணா கார்டன் 'நம்ம ஊர் தமிழ் மக்கள் குழு' சார்பில் 19ம் ஆண்டு பொங்கல் விழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் வாலிபர்களுக்கான வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. 15 பேர் கொண்ட இரு அணியினர் பங்கேற்றனர். இதில், 'பிக் ரோடு பாய்ஸ்' அணியினர் வெற்றி பெற்றனர்.மாலையில், பெரியார் நகர் நலவுரிமை பஞ்சாயத்து மன்றம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. இதில், 'நம்ம ஊர் தமிழ் மக்கள் குழு' சார்பில் பரத நாட்டியம், குத்தாட்டம், சிலம்பாட்டம் நடந்தது.ஜன., 16ம் தேதி பிலால் நகர் பாகலூர் லே -அவுட், பில்லண்ணா கார்டன் முதலாம் ஸ்டேஜ், மூன்றாவது ஸ்டேஜ் பகுதியிலுள்ள பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. மாலையில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.இன்று மாலை முதல் இரவு வரை நியூ பாகலுார் லே- அவுட்டில் உள்ள மாநகராட்சி ஏழுமலை நினைவு மண்டபத்தில் பொங்கல் நிறைவு விழா நடக்கிறது.நிகழ்ச்சியில் குழுவின் சிறுவர் -- சிறுமிகளின் பரத நாட்டியம், கரகாட்டம், குத்தாட்டம், மேற்கத்திய நடனமும் நடக்கிறது.சமுதாயத்தில் நல்ல முறையில் சேவை செய்து வரும் தமிழ் மக்களையும், விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களை பாராட்டி கவுரவிக்கப்படுவர்.விளையாட்டு போட்டிகளிலும், கோலப்போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.மேலும் 2022 - -23 கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., - பி.யூ.சி., இரண்டாம் ஆண்டு தேர்வில், 60 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவியருக்கு 'பாரத் ரத்னா டாக்டர் அம்பேத்கர்' பெயரில் பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.முடிவில் விழாவில் பங்கு பெறும் அனைவருக்கும் அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.'தமிழ் மக்களை கல்வியில் முன்னேற்றி நல்ல சாதனையாளர்களாக மாற்ற வேண்டும்' என்ற நோக்கத்தோடு நம்ம ஊர் தமிழ் மக்கள் குழு, கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை