உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரபல பாடகி பா.ஜ.,வில் ஐக்கியம்

பிரபல பாடகி பா.ஜ.,வில் ஐக்கியம்

புதுடில்லி : லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ள நிலையில், முக்கிய கட்சிகளில் சேர்ந்து தேர்தலில் 'சீட்' பெறும் முயற்சியில் பிரபலங்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஹிந்தி திரைப்பட பாடகி அனுராதா பொடுவால், 69, நேற்று புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.,வில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “சனாதன தர்மத்துடன் ஆழ்ந்த பற்றுள்ள கட்சியான பா.ஜ.,வில் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்,” என கூறினார். இவர், தமிழில் வெளியான கனவே கலையாதே என்ற படத்தில் இடம்பெற்ற, பூசு மஞ்சள், பூசு மஞ்சள் என்ற பிரபலமான பாடலை பாடிஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை