உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொரோனாவுக்கு பிறகான வளர்ச்சி: பின்தங்கியது தமிழகம்

கொரோனாவுக்கு பிறகான வளர்ச்சி: பின்தங்கியது தமிழகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கொரோனா காலத்துக்குப் பிறகான, 2021-22 மற்றும் 2022 - 23ம் நிதியாண்டுகளில், 9 சதவீத வளர்ச்சி கண்ட 17 மாநிலங்களில், தமிழகம் இடம்பெறவில்லை.இதுதொடர்பாக, 'பி.எச்.டி., சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி' எனப்படும் பி.எச்.டி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டிருந்த பொருளாதா மந்தநிலைக்குப் பிறகு 17 மாநிலங்கள், 2022- 2023 நிதியாண்டுகளில் 9 சதவீத ஜி.டி.பி., வளர்ச்சியை தாண்டின. தமிழகம் உட்பட 25 மாநிலங்கள் 7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தன. குஜராத், கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், பீஹார், கர்நாடகா, உத்தர பிரதேசம், ஹரியானா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்துக்கு மேல் பதிவானது.இந்த மாநிலங்களின் அதிவிரைவான வளர்ச்சி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக மீள பெரிதும் உதவியது. பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்கள், வேளாண் உற்பத்தியில் முன்னிலை பெற்றதன் வாயிலாக, நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தன. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஒடிசா மாநிலங்கள் தொழில் வளர்ச்சியும், மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மாநிலங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியும் கண்டதன் வாயிலாக நாட்டின் ஜி.டி.பி.,யில் கணிசமான பங்களித்தன. சுற்றுலாவை பொருளாதார வளர்ச்சியின் மையமாக கொண்ட கேரளா, ராஜஸ்தான், கோவா மாநிலங்கள் அன்னியச் செலாவணி ஈட்டியதில் முன்னிலை வகித்தன. கட்டமைப்பு திட்டங்களில் தமிழகம் மற்றும் ஆந்திராவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் குஜராத், ராஜஸ்தானும் கவனம் செலுத்தின. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

eskboomi9
டிச 14, 2024 00:41

எவன் பார்த்த ஜோசியம் டா இது.....


eskboomi9
டிச 14, 2024 00:40

எப்பேர்ப்பட்ட உண்மைகள்.... எவன் பார்த்த ஜோசியம் டா இது


Raja
டிச 13, 2024 18:33

சென்னை மழை நீர் வடிகால் கட்டமைப்பு பணிகள் நடந்ததால் தமிழகம் வளர்ச்சி கண்டுள்ளது


venugopal s
டிச 13, 2024 16:11

மத்திய அரசின் ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையும் நிதி ஆயோக்கின் அறிக்கையும் தமிழகப் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளாத சங்கிகள் ஏதோ ஒரு துக்கடா நிறுவனத்தின் அறிக்கையை மட்டும் நம்பி ஏற்றுக் கொள்வார்கள்!


Karthikeyan K Y
டிச 13, 2024 13:13

gst பணத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டு தமிழ்நாட்டு நிதிக்கு கையை ஏந்துகிறோம் தமிழ்நாட்டில் வசூலாகும் பணத்தை தமிழ்நாட்டிற்கு செலவு செய்தால் தமிழ்நாடு வளரும். இதில் 39 எம் பி வீண் சம்பளம், ஏதேனும் ரூ எம்பி ஏதேனும் ஒரு தொகுதிக்கு எதாவது செய்து இருக்கிறாரா மாதம் ஒரு முறை இவர்களது செயல் பட்டியலிட்டு சொல்ல முடியுமா


Rajagopalan Narasimhan
டிச 13, 2024 15:18

71%of gst goes to state government. Only 29 % goes to central government.Dont mislead


வைகுண்டேஸ்வரன்
டிச 13, 2024 12:00

கடந்த 9 ஆண்டுகளில், சோத்துக்கும், துணிமணிக்கும் வழியில்லாமல் எத்தனை வட இந்தியர்கள் பிழைப்பு தேடி தமிழ் நாட்டுக்கு வந்தார்கள் என்று பாருங்கள். ஏன் தமிழ் நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வருகிறார்கள்? அவங்க மாநிலத்தில் ஒரு புண்ணாக்கு வளர்ச்சி, முன்னேற்றம் ஒரு எழவும் இல்லை. தமிழ் நாட்டில் தான் தொழில் வாய்ப்பு, வேலை வாய்ப்பு கள் இருக்கின்றன. இதை மறைக்கவோ மறுக்கவோ இயலாது. ஏனெனில் இது தினம் தினம் கண் முன்னே நடக்கிற விஷயம். தேர்தல் நெருங்க நெருங்க, பல தனியார் கூட்டம் இப்படி பெரிய பெரிய பேர் வெச்சுண்டு Data எல்லாம் போடும். அதுக்கு ஆதாரமும் இருக்காது. அதில் உண்மை யும் இருக்காது.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 13, 2024 14:29

அவர்கள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் தான். ஆனால் பணத்தை இங்கு வேலை செய்து சம்பாதித்து பத்திரமாக வாராவாரம் பணத்தை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி அங்கே அதனை முதலீடாக மாற்றி ஜிடிபியை உயர்த்தி உள்ளார்கள். இன்னும் பழைய பல்லவியையே வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது போன்ற பழைய பல்லவி பாடிக்கொண்டே இருக்கமால் இரு மொழி கொள்கை தவிர்த்து மும்மொழி சென்றால் ஒழிய எதிர்காலத்தில் இங்கு பிழைப்பு நடக்காது. கேரளா காரர்கள் ஹிந்தி கற்பதால் அரபு நாடுகள் சென்று உழைத்து பணம் சம்பாதித்து அதனை இங்கு அனுப்பி தொழிற்சாலைகள் குறைவாக உள்ள அம்மாநில ஜிடிபி உயர்த்துகிறார்கள். ஆனால் நாம் இன்னும் நமது பெருமையே பேசி பேசி நேரத்தை வீணடிக்கிறோம். எந்த கேரளாகாரராவது எங்கள் மொழி அப்படி இப்படி என்று பெருமை பேசுவதை பார்த்தது உண்டா? ஆனால் தமிழகத்தில் தலை முதல் கால் வரை இன்னும் மொழிப் பெருமையே பேசிக்கொண்டு உள்ளோம். இதுவே இன்னும் தீரவில்லை.


ghee
டிச 13, 2024 17:07

வட இந்தியர்கள் இங்கு வேலை செய்கிறார்கள்....நம்மவர்கள் டாஸ்மாக்கில் பிஸியாக இருக்கிறார்கள்....


raja
டிச 13, 2024 19:07

அட அறிவில்லா உடன் பருப் பு... உண்மை அதுவல்ல தமிழனை போதை மருந்துக்கு கஞ்சா மதுவுக்கும் அடிமை ஆகி வைத்து உள்ளது இந்த திருத்த திராவிட மாடல் ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற விடியல் அரசு... அவனால் இனி எந்த உடல் உழைப்பும் செய்ய முடியாத நிலை ஆகையால் தான் வடக்கன்ஸ் இங்கு வேலைக்கு வர்றானுவோ...ஒரு புறம் அவனுவி கொள்ளை கொல்லையிலும் ஈடுபட இந்த ஒன்கொள் கோவால் புற மாடலும் காரணம்...


Madras Madra
டிச 13, 2024 11:48

நாங்கள் கப சுர குடி நீர் குடித்தோம் கொரோனா வை விரட்டினோம் ஆனால் திராவிடத்தை விரட்ட இன்னும் மூலிகை கிடைக்கவில்லை


Gokul Krishnan
டிச 13, 2024 11:45

நாலாயிரம் கோடி செலவு செய்த சென்னயே மூழ்கும் போது எந்த செலவும் செய்யாத திருநெல்வேலி விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை மூழ்குவது பற்றியும் கொஞ்சம் எடுத்துரைத்த மக்களுக்கு நல்ல புரியும்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 13, 2024 11:29

கொரோனாவுக்குப் பிந்தைய வளர்ச்சியில் சுணக்கம் ..... என்னதான் தேவை ? கல்வி, தொழில் வளர்ச்சி, இளைஞர்களின் உழைப்பு, வாக்குவங்கிக்காக அல்லாமல் உண்மையாகவே மாநிலத்தை முன்னேற்ற உதவும் திட்டங்கள் ..... இதெல்லாம் சரியில்லைன்னா எந்த மாநிலமும் அம்போதான் .....


nv
டிச 13, 2024 09:48

இன்னும் திருட்டு திராவிட கும்பலும் அதை நம்பும் மக்களும் கிணற்று தவளை போல இருக்கிறார்கள்.. மற்ற மாநிலங்கள் அசுர வளர்ச்சி அடைகின்றன.. இங்கு குடும்பம் மட்டுமே வளர்கிறது . இலவசம் என்று வரிபணத்தை மக்களுக்கு லஞ்சமாக வழங்கி வாக்குகள் பெற்று வெற்றி பெறுகின்றன. பின்னால் TASMAC வாயிலாக எல்லா பணத்தையும் பிடுங்கி இவர்கள் வளர்கிறார்கள்.. இது தெரியாமல் நம்ம ஆட்கள் இவர்களை நம்பி மோசமான எதிர்காலத்தை நோக்கி செல்கின்றனர்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை