உச் கொட்ட வைக்கும் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
உருளைக்கிழங்கில் சிக்கன் பவுடர் சேர்த்து வறுத்து சாப்பிட்டு இருப்போம். தனி மிளகாய் பவுடர் போட்டு மசியல் செய்து கூட சாப்பிட்டு இருப்போம். ஆனால் மிளகு வறுவல் செய்து நிறைய பேர் சாப்பிட்டு இருக்க மாட்டார்கள்.மழை, குளிர்காலங்களில் சாதம் வடித்து சுட சுட ரசம் வைத்து, அதற்கு 'சைட் டிஷ்' ஆக உருளைக்கிழங்கு மிளகு வறுவல் செய்து சாப்பிட்டால், சுவை அட்டகாசமாக இருக்கும். தயிர் சாதம், சாம்பார் சாதம், புளி சாதம், லெமன் சாதத்திற்கும் உருளைக்கிழங்கு மிளகு வறுவல் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.இதை சாப்பிட்டால் சளி, இருமல் பறந்து போகும். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது காரத்தை குறைவாக சேர்த்துக் கொள்ளலாம். பள்ளிக்குச் செல்லும்போது குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில், இந்த ரெசிபியை செய்து கொடுத்தால் கண்டிப்பாக காலி செய்துவிட்டு தான் வருவர். தேவையான பொருட்கள்
l உருளைக்கிழங்கு - கால் கிலோl மிளகு - ஒரு டீஸ்பூன்l சீரகம் - ஒரு டீஸ்பூன் l கறிவேப்பிலை - ஒரு கொத்து l மஞ்சள் பவுடர் - அரை டீஸ்பூன் l உப்பு - தேவையான அளவுl எண்ணெய் - தேவையான அளவுl பச்சை மிளகாய் - ஒன்றுl பெரிய வெங்காயம் - ஒன்று l பூண்டு - நான்கு பற்கள் l கடுகு, உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன் செய்முறை
உருளைக்கிழங்குடன் உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு நன்கு தாளித்துக் கொள்ளவும். பின், பூண்டு சேர்த்து கிளறவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். நன்றாக வதங்கிய பின் பச்சை மிளகாய், மஞ்சள் பவுடர் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். வேகவைத்த உருளைக்கிழங்கை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.ஒரு சிறிய வாணலியில் மிளகு சீரகத்தை சேர்த்து வறுத்து அரைத்து, அதனை உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால், சுவையான, 'உருளைக்கிழங்கு மிளகு வறுவல்' தயார்.