அ.தி.மு.க.,வில் நீடிக்கும் ப.பேட்டை செயலர்
பங்கார்பேட்டை; கர்நாடக அ.தி.மு.க.,வின் வேர்களாகவும், விழுதுகளாகவும் இருந்த தொண்டர்களில் பங்கார்பேட்டை அ.தி.மு.க., செயலர் ரங்கசாமியும் ஒருவர். இவர், பல்வேறு காரணங்களால் அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக, சமீபத்தில் கூறியிருந்தார்.இந்நிலையில், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற கர்நாடக மாநில முன்னாள் இணை செயலர் எஸ்.எம்.பழனி, மாநில முன்னாள் அவைத் தலைவர் சிவசண்முகம் ஆகியோர் பங்கார்பேட்டையில் ரங்கசாமியை சந்தித்தனர்.அப்போது அவர்கள், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நேசிக்கும் தொண்டர்களில், நீங்களும் ஒருவர். கர்நாடகாவுக்கு உங்களின் கட்சி பணி தேவை' என்றனர். இதை அன்புடன் ஏற்ற அவர், 'அ.தி.மு.க.,வை விட்டு விலக மாட்டேன். எப்போதும் போல், கர்நாடகாவில் கட்சி பணியை தொய்வின்றி செய்வேன்' என்றார்.பங்கார்பேட்டை துணை செயலர் ஷாஹின்ஷா, மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் ஆல்பர்ட், ஆனந்த், ஜெகதீஷ் உட்பட கட்சியினர் உடன் இருந்தனர்.