மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
43 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
54 minutes ago
ஹுப்பள்ளி: ''முதல்வர் சித்தராமையா சிறுபிள்ளைத்தனமாக பேசக்கூடாது. மக்கள், உங்களையும் ராகுல் போன்று படிக்காத அரசியல்வாதி என்று நினைத்து விடுவர்,'' என, மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.இது குறித்து, ஹுப்பள்ளியில் நேற்று அவர் கூறியதாவது:முதல்வர் சித்தராமையா, 15 முறை பட்ஜெட் தாக்கல் செய்த அரசியல்வாதி. அவரை கர்நாடக மக்கள் புத்திசாலி தலைவராக கருதுகின்றனர்.ஆனால், காங்., -- எம்.பி., ராகுலை ஒரு படிக்காத அரசியல்வாதி என்று நினைக்கின்றனர். சித்தராமையா செயலால், அவரையும் ராகுல் போன்று படிக்காத அரசியல்வாதி என்று நினைத்துவிடுவர்.பல காரணங்களால், கர்நாடகாவில் ஆட்சியை இழந்தோம். ஆனால், நாடு முழுதும் காங்., ஆட்சிகளை இழந்தது ஏன். உங்கள் கட்சியில் அனைத்தையும் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.ஒரு சில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வரும் லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் 28க்கு 28 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறுவது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.
43 minutes ago
54 minutes ago