வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கிஷோர் எப்பவும் நம்மவா தான்
தோற்கடிக்க பாடுபடுங்கள்.தீயசக்திகளை நாட்டை விட்டே துரத்த வேண்டும்.
பாட்னா: அமேதி லோக்சபா தொகுதியில் ஆறு ஆண்டுக்கு முன் எப்படி ராகுல் தோற்றாரோ அதேபோல ஒரு தோல்வியை தேஜஸ்வி சந்திப்பார் என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகள் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டுள்ளன. புதியதாக ஜன் சுராஜ் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும் தேர்தல் களத்தில் இருக்கிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eeip0xev&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் ரகோபூர் தொகுதிக்குச் செல்லும் முன்னர் நிருபர்களிடம் பேசினார். அப்போது பிரசாந்த் கிஷோர் கூறியதாவது; ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்து (லாலு பிரசாத் குடும்பத்தை குறிப்பிடுகிறார்) மக்களை காக்க, அவர்களிடம் கருத்துகளை கேட்க நான் ரகோபூர் செல்கிறேன். அங்கு ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பிரசாரம் செய்ய இருக்கிறோம். கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நாளை (அக்.12) நடக்கிறது. அங்கு அனைவரின் கருத்தை கேட்ட பின்னர் ரகோபூரில் யார் போட்டியிடுவது என்பது முடிவு செய்யப்படும். நான் அங்கு போட்டியிட போவதாக பேச்சுகள் உள்ளதால், தேஜஸ்வி வேறு இடத்தை தேடுகிறார். அவர் எங்கு போட்டியிட்டாலும் 6 ஆண்டுக்கு முன் அமேதியில் ராகுலுக்கு எப்படி தோல்வி கிடைத்ததோ அதே போன்ற தோல்வி தான் அவருக்கும் கிடைக்கும். தேஜஸ்வி பயந்துவிட்டார். அவர் இரண்டு இடங்களில் போட்டியிடட்டும். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.
கிஷோர் எப்பவும் நம்மவா தான்
தோற்கடிக்க பாடுபடுங்கள்.தீயசக்திகளை நாட்டை விட்டே துரத்த வேண்டும்.