உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்ஜாமின் மனு தள்ளுபடி : பூஜா கேத்கர் வெளிநாடு தப்பி ஓட்டமா ?

முன்ஜாமின் மனு தள்ளுபடி : பூஜா கேத்கர் வெளிநாடு தப்பி ஓட்டமா ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : சர்ச்சை பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கர் மீதான மோசடி வழக்கில் முன்ஜாமின் மனு தள்ளுபடியானதையடுத்து துபாய் தப்பியேடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர், 34, புனே உதவி கலெக்டராக பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்த போது இவர், மீது அடுக்கடுக்கான புகார்கள் வெளிவரத் துவங்கின. இதில் ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை, முறைகேடாக சமர்ப்பித்தது ஆகிய புகார்களின் மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவரது தேர்ச்சியை ரத்து செய்த யு.பி.எஸ்.சி., எதிர்காலத்தில் தேர்வில் பங்கேற்க, அவருக்கு நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட்டது.இந்த வழக்கில் குற்றம் நிரூபணம் ஆனால் கைது செய்யப்படுவதை தடுக்க டில்லி கீழ் கோர்டில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தேவேந்திர குமார் ஜங்காலா, முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.இதையடுத்து பூஜா கேத்கர் துபாய் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடிவருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Natarajan Ramanathan
ஆக 02, 2024 23:46

முன் ஜாமீன் கோருபவர்கள் அவர்களது பாஸ்போர்ட்டை கொடுத்துதான் ஜாமீன் கேட்கவேண்டும் என்ற நடைமுறையை அவசியம் உடனே கொண்டுவர வேண்டும். அதுவே தும்பை விட்டு வால பிடிக்கும் அவலத்தை ஒழிக்கும் சிறந்த வழி.


rama adhavan
ஆக 03, 2024 03:12

வக்கிலை பிடிக்க வேண்டும். சிறையில் அடைக்க வேண்டும். மனுவில் உள்ளுரில் இருப்பதாக சொல்லி கையொப்பம் செய்து விட்டு அந்நேரத்தில் வெளி ஊரில் இருந்தால் கோர்ட் என்ன செய்யும்?


மேலும் செய்திகள்