உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்த சாமியார் ஆக்ராவில் கைது

மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்த சாமியார் ஆக்ராவில் கைது

ஆக்ரா: 17 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த புகாரில், சாமியார் சைதன்யானந்தாவை ஆக்ராவில் கைது செய்யப்பட்டார் என டில்லி போலீசார் தெரிவித்தனர்.புதுடில்லி வசந்த் கஞ்ச்சில், 'ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேனேஜ்மென்ட்' என்ற உயர்கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம் சிருங்கேரி சாரதா பீடத்தின் தலைமையில் இயங்கும் இந்த நிறுவனத்தில், டில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவியர் படிக்கின்றனர்.டில்லி கிளையின் மேலாளராக இருந்த பார்த்தசாரதி என்ற சைதன்யானந்த சரஸ்வதி சாமியார், 17 மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே தலைமறைவான பார்த்தசாரதி என்ற சைதன்யானந்தாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சாமியார் சைதன்யானந்தாவை ஆக்ராவில் கைது செய்யப்பட்டார் என டில்லி போலீசார் தெரிவித்தனர். முன்னதாக, சைதன்யானந்த சரஸ்வதி தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை