உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினுக்கு அடுத்த சிக்கல்: ரூ.1,300 கோடி ஊழல் புகாரில் வழக்குப்பதிய அனுமதி

மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினுக்கு அடுத்த சிக்கல்: ரூ.1,300 கோடி ஊழல் புகாரில் வழக்குப்பதிய அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.1,300 கோடிக்கு ஊழல் நடந்த புகாரில் முன்னாள் அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுமதி அளித்து உள்ளார்.டில்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது, டில்லி அரசு பள்ளிகளில் பொதுப்பணித்துறை மூலம் 2,400 வகுப்பறைகள் கட்டியதில் ரூ.1,300 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் குற்றம்சாட்டியது. இது குறித்து விசாரிக்கும்படி ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த விவகாரத்தில் விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி தலைமைச்செயலாளருக்கு கவர்னர் சக்சேனா உத்தரவிட்டு இருந்தார்.ஆனால், இந்த குற்றச்சாட்டை மணீஷ் சிசோடியா மறுத்தார். குற்றச்சாட்டுகள் அனைத்தும் பா.ஜ., தூண்டுதலின்படி எழுப்பப்படுவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இந்த ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுமதி அளித்து உள்ளார்.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைதான சத்யேந்தர் ஜெயினும், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான மணீஷ் சிசோடியாவும் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர்கள் தோல்வியடைந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் அவர்களுக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Azar Mufeen
மார் 14, 2025 17:39

இதுக்கு முன்னாடி போட்ட (பொய்) வழக்குகளிலேயே குற்றம் நிரூபிக்க முடியவில்லை இன்னொரு பொய் வழக்கு வேறா? அது சரி கெஜிரிவால் பிஜேபி கவுன்சிலர்கள் ஊழல் செய்த (6000கோடிகள்)வழக்குக்கு ஏன் அனுமதி தரவில்லை?


J.V. Iyer
மார் 14, 2025 04:35

ஏன் இந்தியாவில் மட்டும் பலவருடங்கள் இந்த வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு, பிறகு கிடப்பில் போடுவது வழக்கமாகிவிட்டது? உடனே சீக்கிரம் தண்டனை வாங்கிக்கொடுக்க சட்டத்தை மாற்றுங்கள். சட்டத்தை கடுமையாக்குங்கள். வழக்குகளை ஆரம்பித்தால் மட்டுமே போதாது. வெற்றிகரமாக முடிக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு போடாதீர்கள்.


Kasimani Baskaran
மார் 14, 2025 04:01

தமிழகத்திலும் அடுத்த ஆண்டுக்குள் முக்கிய புள்ளிகள் பதவியில்லாது ஜெயிலில் கம்பி எண்ண பிரகாசமான வாய்ப்பு தெரிகிறது.


தமிழன்
மார் 14, 2025 00:59

இது என்னடா வாசிங்மெசினுக்கு வந்த சோதனை


Indhiyan
மார் 13, 2025 21:46

நாத்தம் தாங்கல. ஊழலுக்கு எதிராக அண்ணா ஹஜாரேவை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து ஆட்டைய போடுவதே வேலையாக இருந்திருக்கிறார்கள். திருடர்கள். இனம் இனத்தோடு சேர்ந்து INDI கூட்டணிவைத்து கூட்டுக்கொள்ளை அடித்திருக்கிறார்கள். தமிழில் கழகம் என்றால் சூதாடும் இடம் என்று பொருள் உள்ளது. ரொம்ப சரிதான்


Ramesh Sargam
மார் 13, 2025 21:35

அடுத்து தமிழக அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு.


Raghavan
மார் 13, 2025 21:35

இதெல்லாம் சும்மா ஒரு கண்துடைப்பு.


Mediagoons
மார் 13, 2025 21:19

வரிசையில் அடுத்து மோடி அம்பானி அதானி மஹிந்திரா


M Ramachandran
மார் 13, 2025 20:54

என்ன எல்லாம் டெல்லியை என நொண்டி கொண்டிருக்கிறீர்கள் இஙகு தமிழ் நாட்டு பக்கம் இங்கெல்லாம் உத்தம புத்திரர்கள் நாடகம் நடக்குது வந்து கொஞ்சம் பட்டாசு கொளுத்தி போட கூடாதா.


பாலா
மார் 13, 2025 20:45

அடுத்தது எப்பொழுது நடக்குப் போகின்றது என்று திருட்டுத் கொலைகாரத் தெலுங்குக் கும்பல்களுக்கு வயிற்றோட்டமும் காய்ச்சலுமாம்? திகாரா புழலா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை