உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புது திட்டம் அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

புது திட்டம் அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடில்லி: 18 வது லோக்சபா அமைந்ததும் பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். ' இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருவதாகவும், இன்னும் எதிர்காலத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு வருவாயை பெருக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும், ஏழைகளுக்கு மேலும் 3 கோடி வீடுகள் கட்டித்தரப்படும் ' என்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்தார். மேலும் தமிழகத்தில் ராணுவ வழித்தடம் அமைக்கப்படும் என்றும் தமிழ் கலாசாரத்தை போற்றும் வகையில் குஜராத் மற்றும் உ.பி., மாநிலங்களில் தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக குதிரை படை புடை சூழ ராணுவ வீரர்கள் அணிவகுத்து ஜனாதிபதியை வரவேற்று வந்தனர். இவரை பிரதமர் மோடி , துணை ஜனாதிபதி ஜக்தீப்தன்கர், சபாநாயகார் ஓம் பிர்லா வரவேற்றனர். பார்லி., அறைக்குள் வரும் போது பாதுகாவலர் ஒருவர் செங்கோல் ஏந்தி வர ஜனாதிபதி அழைத்து வரப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.பி.,க்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார். ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையில் இடம் பெற்ற அம்சங்கள் விவரம் வருமாறு:

இந்திய பொருளாதாரம் வேகமான முன்னேற்றம் !

* நடந்து முடிந்த தேர்தல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்களின் ஓட்டளிப்பு அதிகம் என்பது பெருமையான விஷயம்* ஜம்மு காஷ்மீரில் அதிக அளவு ஓட்டுப்பதிவாகி உள்ளது. * இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது* உலக அளவில் இந்தியா 3 வது பொருளாதார நாடு என்பதை எட்ட பயணிக்கிறது.* பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 15 சதவீதமாக உள்ளது* 140 கோடி இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த அவை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் * பாரதத்தில் மீண்டும் பெரும்பான்மை கொண்ட அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.* 60 ஆண்டுக்கு பின் ஆட்சியில் இருக்கும் அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.* அரசின் மீது மக்கள் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.*லோக்சபா தேர்தல் என்பது உலகளவில் நடக்கும் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா ஆகும்.* இந்தியா வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது* மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற சிந்தனையின் அடிப்படையில் அரசு செயலாற்றுகிறது.

மூன்று சிந்தனை

*சீர்திருத்தம் , செயலாக்கம், மாற்றம் என்ற சிந்தனையுடன் இந்தியா வேகமாக முன்னேறுகிறது.* உ.பி., - குஜராத்தில் தமிழ்ச்சங்கம நிகழ்ச்சி நடத்தப்படும்* ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் ராணுவ வழித்தடம் தமிழகம் மற்றும் உ.பி.,யி.,ல் அமைக்கப்படும்* வினாத்தாள் கசிவு தொடர்பாக கடும் நடவடிக்கை* பெண்களின் வருவாயை அதிகரிக்க, லட்சாதிபதியாக்க புது திட்டம்* வடகிழக்கு மாநிலங்களில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.* எந்தளவு நாம் தற்சார்பு அடைகிறோமோ அந்தளவு விவசாயிகள் வளம் பெருகும்*இனி வரும் காலம் இயற்கை விவசாயத்தின் காலம்*உற்பத்தி, சேவைகள், விவசாயம் ஆகிய மூன்றுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.*பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ரூ.3,20,000 கோடி மதிப்பிலான உதவித்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

எதிர்கட்சிகள் அமளி

ஜனாதிபதி முர்மு பேசிக்கொண்டிருக்கும் போது காங்., சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். நீட் விவகாரம், மணிப்பூர் கலவரம் . எமர்ஜென்ஸி உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaranarayanan
ஜூன் 27, 2024 20:39

உ.பி., - குஜராத்தில் தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் ராணுவ வழித்தடம் தமிழகம் மற்றும் உ.பி.,யி.,ல் அமைக்கப்படும் என்று அறிவித்தவுடனேயே தமிழக நாற்பது எம்.பி க்கள் எழுந்து நின்று அவையில் அனைவரும் மோடிக்கு நன்றி சொல்லி இருக்க வேண்டும் இதைக்கூடவா மற்றவர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும். தமிழ் நாட்டிற்கு, மொழிக்கு இனத்தவர்களுக்கு காங்கிரசு ஆட்சியின் நடந்த நன்மைகளை காட்டிலும் மோடி அரசு அபரிமிதமாக செய்கிறது செய்து கொண்டிருக்கிறது தமிழக எம்.பிக்கள் இவைகளை பாராட்டா விட்டாலும் தூற்றாமல் இருக்க வேண்டும்


S. Narayanan
ஜூன் 27, 2024 20:28

மோடிஜி நிச்சயம் நிறைவேற்றுவர்


Bala
ஜூன் 27, 2024 16:47

தமிழ்நாட்டுத் தமிழர்கள் காதில் பூ வைத்திருக்கும் இனம் என்ற எண்ணம் வடக்கன்களுக்கு விரைவில் தெரியும். ஒரு தமிழன் ஒரிசாவுக்கு முதலமைச்சராக வரக்கூடாது, தமிழ் நீதி மன்றத்தில் இல்லை, தமிழ்ப்பெயர்களே இல்லை ஆனால் தமிழ்ச்சங்கம் அடுத்தன் நாட்டில் ?


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 20:04

முதலில் தமிழக அரசியல் சாசனத்தை தவறின்றி முழுமையாக தமிழில் மொழி பெயர்க்கட்டும். அப்புறம் கோர்ட்டில் அமல்படுத்தலாம். தமிழை வழக்காடு மொழியாக்க தலைமை நீதிபதியால் மட்டுமே இயலும். மத்திய அரசால் முடியாது.


ES
ஜூன் 27, 2024 16:11

Remove the tax for foods first


www
ஜூன் 27, 2024 15:50

நீங்க லத்ச்சாதிபதி எல்லா அப்பறோம் ஆக்கலாம்.. முதல ஹோட்டல் பொய் சாப்பிட்ட கூட வரி.. வரி வரி.. .. முதலில் சமையல் காஸ் சிலிண்டர் விலையை குறைக்க யோகிதை இல்லை... பெட்ரொல் மீதான வரி.. அனைத்திலும் வரி.. உங்கள கடவுள் தான் கேக்க வேண்டும்...


venugopal s
ஜூன் 27, 2024 15:05

ஏன் இந்த தமிழ்ச்சங்கமம் நாடகம் நடத்த குஜராத், உ.பி. தவிர மற்ற மாநிலங்கள் ஒப்புக் கொள்ள வில்லையா?


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 15:55

குடும்பக் கேளிக்கை விழாவுக்கு செம்மொழி மாநாடு எனப் பெயர் வைத்து வரிப்பணத்த வீணாக்கியது யார்?


Vathsan
ஜூன் 27, 2024 14:58

கோடீஸ்வரர்களை லட்சதீபதி ஆக்கும் திட்டம்.


Ramesh Sargam
ஜூன் 27, 2024 13:12

மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக்குவது மத்திய அரசின் திட்டம் என்றால், அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையுடன் மக்களை - ஆண், பெண் - இருபாலாரையும் சேர்த்து குடிகாரர்கள் ஆக்குவது தமிழக அரசின் மாபெரும் திட்டம்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ