உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சி முத்ரா திட்டம்: பிரதமர் தமிழில் பதிவு

மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சி முத்ரா திட்டம்: பிரதமர் தமிழில் பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும்'' என பிரதமர் மோடி, எக்ஸ் சமூக வலைதளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.கடந்த 2015 ஏப்ரலில், பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. குறு, சிறு தொழில்முனைவோருக்கு, 10 லட்சம் ரூபாய் வரை, பிணையமில்லாத சிறு கடன்களை வாங்குவதை எளிதாக்குவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நுண் கடன் நிறுவனங்கள் கடன்களை வழங்குகின்றன.இந்த திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி, எக்ஸ் சமூக வலைதளத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது : முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும், இது கோடிக் கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது மற்றும் தொழில்முனைவோரை வளர்க்கிறது. அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மேலும், இந்த கருத்தை மலையாளம், கன்னடம், ஒடியா, பெங்காளி, தெலுங்கு, ஹிந்தி, அசாமி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பதிவிட்டு உள்ளார்.பிரதமரின் இந்த பதிவுக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ