உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயர்ன்மேன் போட்டியில் அசத்திய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா பிரதமர் மோடி வாழ்த்து

அயர்ன்மேன் போட்டியில் அசத்திய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா பிரதமர் மோடி வாழ்த்து

புதுடில்லி: கோவாவில் நடந்த சர்வதேச, 'அயர்ன்மேன் டிரையத்லான்' போட்டியில் பங்கேற்று சாதித்த தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., தேஜஸ்விக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கோவாவில் கடந்த சில ஆண்டுகளாக, 'அயர்ன்மேன் 70.3 டிரையத்லான்' போட்டி நடந்து வருகிறது. இது, 1.9 கி.மீ., நீச்சல், 90 கி.மீ., சைக்கிள் ஓட்டுதல் மற்றும் 21.1 கி.மீ., ஓட்டப்பந்தயம் ஆகியவற்றை உள்ளடக்கிய கடினமான விளையாட்டு நிகழ்வு. இந் த ஆண்டு நடந்த போட்டியில், 31 நாடுகளில் இருந்து, 1,300 வீரர்கள் பங்கேற்றனர். 8.5 மணி நேரத்திற்குள் போட்டி துாரத்தை கடக்க வேண்டும். அதன்படி, 805 வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் போட்டி துா ரத்தை கடந்தனர். அவர்களில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யாவும் போட்டி துாரத்தை கடந்து சாதனை படைத்தனர். அண்ணாமலை, சைக்கிள் போட்டியில் பந்தய துாரத்தை, 3 மணி நேரம், 14 நிமி டம், 33 வினாடிகளில் கடந்தார். இதுபோன்று, 1.9 கி.மீ., துார நீச்சல், 21.1 கி.மீ., துார ஓட்டத்தையும் வெற்றிகரமாக கடந்து மூன்று போட்டிகளையும், 8 மணி நேரம் 13 நிமிடங்களில் முடித்தார். இந்த போட்டியில், இரண்டாவது முறையாக பங்கேற்ற பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, மூன்று போட்டிகளையும் சேர்த்து, 7 மணி நேரம் 49 நிமிடங்களில் கடந்தார். இப்போட்டியில் சாதித்த இருவரையும் பிரதமர் மோடி பாராட்டி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி: 'அய ர்ன்மேன்' போன்ற நிகழ்வுகளில் நம் இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசத்தின், 'பிட் இந்தியா' இயக்கத்துக்கு இத்தகைய நிகழ்வுகள் முக்கிய பங்களிக்கின்றன. நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் இலக்கை எட்டிய கட்சியின் இளைஞர்களான அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யாவை வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ