உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரும் 18ல் வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி!

வரும் 18ல் வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி: பிரதமராக பதவியேற்ற பிறகு வரும் 18 ம் தேதி பிரதமர் மோடி, அவரது தொகுதியான வாரணாசிக்கு செல்ல உள்ளார். விவசாயிகள் கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார்.உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமர் மோடி தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். நேற்று முன்தினம்( ஜூன் 9) பிரதமராகவும் அவர் பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம், முன்னாள் பிரதமர் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3வது பிரதமராக பதவியேற்ற பெருமை மோடிக்கு கிடைத்து உள்ளது. இந்நிலையில், வரும் 18 ம் தேதி வாரணாசியில் நடக்கும் விவசாயிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி பா.ஜ., நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இதன் பிறகு காசி விஸ்வநாதர் கோயில் சென்று சாமி தரிசனம் செய்கிறார். தஷேஸ்வமத் படித்துறையில் நடக்கும் கங்கா ஆரத்தியிலும் மோடி பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி வேண்டுகோள்

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: யோகாவை நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றுவது அவசியம். மற்றவர்களை யோகா செய்ய, ஊக்குவிப்பதும் அவசியம். யோகா அமைதி மற்றும் தைரியத்துடன் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை