உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 நாடுகள் பயணம் நிறைவு: டில்லி திரும்பினார் பிரதமர் மோடி

3 நாடுகள் பயணம் நிறைவு: டில்லி திரும்பினார் பிரதமர் மோடி

புதுடில்லி: 3 நாடுகள் பயணம் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று டில்லி திரும்பினார் பிரதமர் மோடி.பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக 3 நாடுகளுக்கு சென்றார்.முதல் கட்டமாக அவர் கடந்த 15-ம் தேதி சைப்ரஸ் சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் கிறிஸ்டோடவுலிட்சை மோடி சந்தித்தார்.அதை தொடர்ந்து மோடி, கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நேற்று நடந்த ஜி 7 உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொண்டார். இங்கு கனடா பிரதமர் இத்தாலி, பிரான்ஸ் நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார்.கனடா பயணத்தை முடித்த பின், பிரதமர் மோடி அங்கிருந்து குரேஷியா சென்றார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் சோரன் மிலனோவ் மற்றும் பிரதமர் பிளென்கோவிக்கை சந்தித்து இரு நாட்டு உறவு மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.அதை தொடர்ந்து பிரதமர் மோடி,தனது 3 நாடுகள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, இன்று பிற்பகல் டில்லி வந்தடைந்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை