புதுடில்லி:''உலகின் தொன்மையான மொழியான தமிழ் நமக்கு பெருமை. தமிழ் கவிஞர் திருவள்ளுவரின் பெயரில், உலகெங்கும் கலாசார மையங்கள் அமைக்கப்படும்,'' என, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவாதம் அளித்தார். அடுத்த ஐந்து ஆண்டில், மூன்று கோடி வீடுகள் கட்டித் தருவது உள்ளிட்டவை, தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்களாக இடம் பெற்றுள்ளன.லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி துவங்கி, ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடக்க உள்ளது. ஜூன் 4ல் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. லோக்சபா தேர்தலையொட்டி, பல்வேறு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4pnt5vhy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவற்றில், பல கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள நிலையில், 2047ல் நாட்டை வளர்ந்த நாடாக்கும் நோக்கத்துடன் கூடிய திட்டங்கள் இடம் பெற்றுள்ள தேர்தல் அறிக்கையை பா.ஜ., நேற்று வெளியிட்டுள்ளது.'சங்கல்ப் பத்ரா' எனப்படும் இந்த தேர்தல் அறிக்கை, மோடியின்உத்தரவாதம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுஉள்ளது. ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகிய நான்கு முக்கிய பிரிவின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த நான்கு பிரிவுகளை சேர்ந்த, அரசின் திட்டங்களால் பலனடைந்த நான்கு பேரிடம், அதன் நகல் கொடுக்கப்பட்டது.அவசியம்
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, ராணுவ அமைச்சரும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் தேர்தல் அறிக்கைகளில் கூறியவற்றை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். தேர்தல் அறிக்கைக்கான புனிதத்தை பா.ஜ., எப்போதும் மதிக்கிறது; அதை பின்பற்றியுள்ளோம். உலகம் தற்போது பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.இந்த நேரத்தில், வலுவான, ஸ்திரமான தனிப்பெரும்பான்மையுடன் கூடிய அரசு அமைவது அவசியம். ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ள உத்தரவாதங்களை நிறைவேற்ற துவங்குவோம். ஒரே நாடு; ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், நாடு முழுதும் ஒரே மாதிரியான வாக்காளர் பட்டியல் வெளியிடுவது போன்றவற்றை நிறைவேற்றுவோம்.வாழ்க்கை தரம்
நாட்டு மக்களின் ஆசிர்வாதத்தை கேட்டு, மோடியின் உத்தரவாதமாக இந்த தேர்தல் அறிக்கையை சமர்ப்பிக்கிறேன்.உலகின் மிகவும் தொன்மையான மொழி தமிழ்; அது நம் பெருமையாகும். தமிழ் மொழிக்கு உலகெங்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும், நாங்கள் மேற்கொள்வோம். தமிழ் கவிஞர் திருவள்ளுவரின் பெயரில், உலகெங்கும் திருவள்ளுவர்கலாசார மையங்களை நிறுவுவோம்.'விக் ஷித் பாரத்' எனப்படும் வளர்ந்த பாரதத்தை உருவாக்கும், நான்கு முக்கிய துாண்களான இளைஞர்கள், பெண்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரம் மேம்படுவதை, இந்த தேர்தல் அறிக்கை உறுதி செய்கிறது.அவர்கள் கண்ணியத்துடன், தரமான வாழ்க்கையை பெறுவதற்கும், வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும், இந்த தேர்தல் அறிக்கை உத்தரவாதம் அளிக்கிறது. கடந்த 10 ஆண்டு பா.ஜ., ஆட்சியில், ஏழைகளுக்கு நான்கு கோடி தரமான வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. மாநிலங்களில் இருந்து வந்த பரிந்துரையின் அடிப்படையில், இந்த திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் மூன்று கோடி வீடுகள் கட்டித் தரப்படும்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரான ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது:நாட்டு மக்களுக்கு, பிரதமர் மோடியின் உத்தரவாதங்களாக இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது, 24 காரட் தங்கத்துக்கு இணையானது. சிறந்த நிர்வாகத்துக்கான தரமான தங்கமாக இது விளங்கும். நாடு முழுதும் மக்களிடமிருந்து, 15 லட்சம் பரிந்துரைகள் பெறப்பட்டு, அவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார். கனவுகள் நிறைவேறும்!அனைவருக்குமான வளர்ச்சியை நோக்கி,
மோடியின் உத்தரவாதம் என்ற பெயரில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குறுதிகள்
தயாரிக்கப்பட்டுள்ளன. இவை, இந்த நாட்டு மக்களுக்கானவை; அனைத்து
துறைகளுக்குமானவை. கடந்த 10 ஆண்டுகளாக, பிரதமர் நரேந்திர மோடி, நம் கனவுகளை
நிறைவேற்றி வருகிறார்.நட்டா,தேசிய தலைவர், பா.ஜ.,140 கோடி மக்களின் விருப்பம்மோடியின்
உத்தரவாதம் என்ற தேர்தல் வாக்குறுதிகள், 140 கோடி மக்களின் விருப்பங்களின்
சாராம்சத்தை படம் பிடித்து காட்டுகின்றன. நாடு முழுதும் மக்களின்
விருப்பங்களை கேட்டறிந்து, தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். மக்களின்
கனவுகள் மற்றும் விருப்பங்களை நனவாக்க அயராது உழைப்போம் என்ற பிரதமர்
மோடியின் உத்தரவாதம் தான் இந்த தேர்தல் அறிக்கை.ராஜ்நாத் சிங், தேர்தல் அறிக்கை குழு தலைவர், பா.ஜ.,பொய் பத்திரம்!பா.ஜ.,வின்
தேர்தல் அறிக்கை உறுதிமொழி பத்திரமல்ல; பொய் பத்திரம். 10 ஆண்டுகளில் என்ன
செய்தோம் என்பதை பற்றி அதில் ஒரு வார்த்தை கூட இல்லை. இந்த வாக்குறுதிகளை
மக்கள் நம்ப மாட்டார்கள். ஆதிஷிடில்லி அமைச்சர், ஆம் ஆத்மிமோடி செய்தது என்ன?பா.ஜ.,வின்
தேர்தல் அறிக்கையில் உண்மைகள் இல்லை. ஒட்டு மொத்த பொய்களை இணைத்து,
தேர்தல் அறிக்கை என்ற பெயரில் உருவாக்கி உள்ளனர். 10 ஆண்டு கால ஆட்சியில்
மோடி செய்தது என்ன? ஏன் இதை பற்றி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை.மல்லிகார்ஜுன கார்கேதலைவர், காங்கிரஸ்மோடியின் முக்கிய உத்தரவாதங்கள்! பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில், ஏழை குடும்பங்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள், இளம் குடிமக்கள், மூத்த குடிமக்கள், விவசாயிகள், நல்லாட்சி என, 24 தலைப்புகளின் கீழ், மோடியின் உத்தரவாதங்கள் என்ற பெயரில், பல வாக்குறுதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:* ஏழைகளுக்கான ரேஷன் திட்டம், ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களுக்கான 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு திட்டம் தொடரும்* பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ஏற்கனவே நான்கு கோடி ஏழைகளுக்கு தரமான வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், அனைத்து ஏழைகளுக்கும் தரமான வீடுகள் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்* பிரதமர் சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களுக்கு மின்சாரம் கிடைக்கும்* கிராமப் பகுதிகளை சேர்ந்த மூன்று கோடி பெண்களை லட்சாதிபதி சகோதரிகளாக்குவோம்* மகளிர் சுயஉதவிக் குழுக்களை, சேவை துறையுடன் இணைப்போம். இதன் வாயிலாக அவர்களுடைய பொருட்களுக்கு சந்தை அணுகல் அதிகரிக்கும்* நாரிசக்தி வந்தன் அபியான் எனப்படும் பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் நடைமுறைபடுத்தப்படும்* அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளில் வெளிப்படை தன்மை* கேள்வித்தாள் முன்னதாகவே வெளியாவதை தடுக்க தனி சட்டம்* விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் வலுப்படுத்தப்படும்* குறிப்பிட்ட பயிர்களுக்கான எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும்* விவசாயிகளுக்கு உதவும் வகையில் தகவல்கள் அளிப்பதற்காக, 'பாரத் க்ருஷி' என்ற விண்கலம் செலுத்தப்படும்* சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஆட்டோ, டாக்சி, டிரக் டிரைவர்கள் சேர்க்கப்படுவர்* நாட்டின் எல்லைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்படும். வேலியில்லா இடங்களில் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்புச்சுவர் அமைக்கப்படும்* சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்* உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும்* வேலைவாய்ப்புகள் விரிவுபடுத்தப்படும்* சிறந்த நிர்வாகத்துக்கான மோடியின் உறுதிமொழி* பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்* ஒரு நாடு; ஒரே தேர்தல் சாத்தியமாக்கப்படும்* சீரான பிராந்திய வளர்ச்சி, வடகிழக்கில் அமைதி பராமரிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.