உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதி எண் 15528 ஒதுக்கீடு: சிறையில் 8 மணி நேரம் வேலை, தினசரி கூலி ரூ.524

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதி எண் 15528 ஒதுக்கீடு: சிறையில் 8 மணி நேரம் வேலை, தினசரி கூலி ரூ.524

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு; ஆயுள் தண்டனை பெற்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதி எண் 15528 என்ற எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சிறையில் தினசரி 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், அதற்கு தினக்கூலியாக ரூ.524 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மீது பதிவு செய்யப்பட்ட 4 பாலியல் வழக்குகளில் ஒரு வழக்கில் தான் ஆயுள் சிறை அளிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 3 வழக்குகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரஜ்வலுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.இந் நிலையில் தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர், சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கான அறையில் அடைக்கப்பட்டது வரை பிரஜ்வல் எப்படி இருந்தார், எல்லோரையும் எப்படி எதிர்கொள்கிறார் என்பது பற்றிய புதிய தகவல்களை மூத்த சிறை அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.அதுபற்றிய விவரம் வருமாறு; கோர்ட் தண்டனை அறிவிப்புக்கு பின்னர், பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கதறி, கண்ணீர்விட்ட படியே தான் அவர் இருந்திருக்கிறார். மேலும் மனதளவில் உடைந்து போனவராகவே காணப்பட்டு உள்ளார்.சிறையில் கைதிகள் அடைக்கப்படும் போது மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவது வழக்கம். அப்படி அவருக்கும் நடத்தப்படும் போது, பிரஜ்வல் மிகுந்த கோபமாகவே இருந்துள்ளார். மனம் உடைந்து அழுதே விட்டார். அதன் பின்னர், வழக்கு தொடர்பான தான் மேல்முறையீடு செய்ய இருப்பதாக சிறை அதிகாரிகளிடம் கூறி இருக்கிறார். சிறையில் அதி உயர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் அடைக்கப்பட்டு உள்ளார்.கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான உடைதான் பிரஜ்வலுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவருக்கு இன்று(ஆக.3) காலை கைதி எண் 15528 ஒதுக்கப்பட்டு உள்ளது. தினமும் 8 மணிநேரம் வேலையாளாக பணி செய்ய வேண்டும். அதற்கு அவருக்கு தினசரி கூலியாக ரூ.524 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு சிறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

vee srikanth
ஆக 04, 2025 18:29

ஏற்கனவே, நம்ம ஊரு அம்மா ஷாப்பிங் எல்லாம் சிறைக்குள்ளே இருந்து போயிட்டு வந்தாங்க - அதே போல், தர்ஷன் கிட்டே கேளுங்க-கவலைபடாதீங்க - உங்களுக்கும் எல்லா வசதியும் கிடைக்கும்


SUBRAMANIAN P
ஆக 04, 2025 17:37

ஏலே திமுகவுல சேர்ந்த்துருலா... நல்லவனாயிடுவ.. அமைச்சர் பதவி கிடைக்கும்.. சுப்ரீம் கோர்ட்டால் கூட ஒன்னும் செய்யமுடியாது..


venugopal s
ஆக 04, 2025 09:13

பாஜகவில் சேர்ந்து மேல் கோர்ட்டில் அப்பீல் செய்தால் விடுதலை சுலபமாக கிடைத்து விடுமே!


ஆரூர் ரங்
ஆக 04, 2025 16:41

தமிழபிரசன்னா, பெரிய கருப்பன் திமுக வை விட்டு வெளியேறி விட்டார்களா?.


சின்ன கருப்பன், நாயக்கன் பாளயம்
ஆக 04, 2025 08:10

சில வருடங்களுக்கு முன் தேர்தல் சமயத்தில் தமிழகத்தில் ஒரு அரசியல்வியாதியின் இதேபோன்று ஒரு வீடியோ வெளியானது... கட்சி தலைமையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது.. அது அவருடய தனிபட்ட விஷயம் என்றார்.. அந்த தெர்தலில் அவர்தான் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.... இது வரலாறு....


கடலோடி
ஆக 04, 2025 07:36

தலைவர் பழைய BJP கூட்டணி வேட்பாளராச்சே


பெங்களூரான்
ஆக 04, 2025 07:00

ரெண்டு கோடி முதல் எட்டு கோடி வரை பேரம் பேசுவதாக மார்க்கெட்டில் பேசிக்கறாங்க.


Indhuindian
ஆக 04, 2025 05:13

இருக்க இடமும் குடுத்து சாப்பாடும் போட்டு ஒரு நாளைக்கு ஐநூத்தி இருபத்து நாலு ரூவா கூலியா இந்த டீலிங் நல்லா இருக்கே


Natarajan Ramanathan
ஆக 03, 2025 22:47

மேல் முறையீட்டில் இன்னும் கடுமையான தண்டனை, அதாவது சம்பளமே இல்லாமல் தினம் பதினாறு மணிநேரம் வேலைசெய்யும்படிக்கு தண்டனை கிடைக்கவேண்டும்.


Ramesh Sargam
ஆக 03, 2025 22:06

சிறப்பான வரவேற்கத்தக்க தண்டனை. ஆனால் இதுபோன்று தவறு செய்தவர் பலர், குறிப்பாக தவறுசெய்த மற்ற அரசியல்வாதிகளுக்கும் இப்படி ஏன் தண்டனை கொடுப்பதில்லை?


K V Ramadoss
ஆக 03, 2025 21:47

எதற்கு தினம் ரூ 524 கூலி ..கூலி கொடுக்காமல் வேலை வாங்கவேண்டும்....


சமீபத்திய செய்தி