உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவமனையில் இருந்து கைதி ஓட்டம்

மருத்துவமனையில் இருந்து கைதி ஓட்டம்

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி, போலீசாரின் கவனத்தை திசை திருப்பி தப்பி ஓடினார்.சிக்கமகளுரின், மாகலு கிராமத்தைச் சேர்ந்த ரவுடி பூர்ணேஷ், 30, பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். கொலை முயற்சி வழக்கில் இவர், போலீசாரால் தேடப்பட்டார். ஒரு மாதத்துக்கு முன்பு போலீசார், ரவுடியை கைது செய்ய சென்றபோது, போலீசாரை ஆயுதங்களால் தாக்க முற்பட்டார். அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.காலில் குண்டு பாய்ந்ததில், காயமடைந்த அவர் ஒரு மாதமாக, சிக்கமகளூரு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை, பாதுகாப்பில் இருந்த போலீசாரின் கண்களை மறைத்து, மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை