உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவுக்கு நன்றிக்கடனை அடையுங்கள்; நிர்மலாவுக்கு பிரியங்க் கார்கே கோரிக்கை

கர்நாடகாவுக்கு நன்றிக்கடனை அடையுங்கள்; நிர்மலாவுக்கு பிரியங்க் கார்கே கோரிக்கை

பெங்களூரு; ''கர்நாடகாவுக்கு சிறப்பு நிதி தொகுப்பை அறிவித்து, கன்னடர்களுக்கு நீங்கள் பட்ட நன்றிக்கடனை அடையுங்கள்,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே கோரிக்கை வைத்து உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: மத்திய பட்ஜெட்டில் எதுவுமே இருக்காது என்று முன்கூட்டியே தெரியும். இதனால் நாங்கள் பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு வைக்கவில்லை. பட்ஜெட்டில் நமது மாநிலம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. தயிரில் கல் தேடும் அரசியலை நாங்கள் செய்யவில்லை.புள்ளி விபரங்கள் அடிப்படையில் மத்திய அரசிடம் வரி விலக்கு மற்றும் நிதி கேட்கிறோம். வேலை வாய்ப்புகளை அதிகம் உருவாக்கும் மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கினால், அது நாட்டிற்கு நல்லது. இம்முறை பீஹாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளனர். இது மக்களுக்கான பட்ஜெட் இல்லை; அரசியல் பட்ஜெட்.நிர்மலா சீதாராமன், கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி., ஆக உள்ளார். நமது மாநிலத்திற்கு சிறப்பு நிதி தொகுப்பை அறிவித்து, கன்னடர்களுக்கு பட்ட நன்றி கடனை அவர் அடைக்க வேண்டும். சித்தராமையா ஐந்து ஆண்டுகளும் முதல்வராக இருப்பார் என்று, எம்.எல்.ஏ.,க்கள் உள் உணர்வாக உள்ளது என்று, அமைச்சர் பரமேஸ்வர் கூறி உள்ளார்.முதல்வர் பதவி குறித்து மேலிடம் முடிவு எடுக்கும் என்று சித்தராமையா, சிவகுமார் கூறி உள்ளனர். இனிமேல் அதுபற்றி யாரும் பேச வேண்டாம். எங்கள் கட்சியை பற்றி பேசும் எதிர்க்கட்சி தலைவர் அசோக், அவரது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை முதலில் கவனிக்கட்டும்.எஸ்.சி., - எஸ்.டி., சமூக அமைச்சர்கள் ஒன்றாக கூட்டம் நடத்தினால் தவறு இல்லை. இதற்கு கோஷ்டி அரசியல் என்று பெயர் சூட்டுவதா. நான், எங்கள் கட்சி எம்.எல்.ஏ., பிரசாத் அப்பய்யா வீட்டிற்கு சென்றேன். நாங்கள் இருவரும் தனி கோஷ்டி ஆகிவிட முடியுமா.சில பிரச்னைகள் குறித்து விவாதிக்க எஸ்.சி., - எஸ்.டி., அமைச்சர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்தோம். நாங்களும் கூட்டத்தில் கலந்து கொள்கிறோம் என்று, மேலிட தலைவர் கூறி உள்ளனர். அவர்கள் வரும் வரை நமது வேலையை பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி