மேலும் செய்திகள்
கல்லால் தாக்கி டீக்கடை மாஸ்டர் கொலை
07-Nov-2024
நைனிடால் : உத்தரகண்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலையில், மைனக் பால், 44, என்பவர் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.இவர், நண்பர்கள் இருவருடன் உத்தரகண்டின் நைனிடால் மாவட்டத்துக்கு சமீபத்தில் சுற்றுலா சென்றார்.அம்மாவட்டத்தின் லால்குவான் என்ற இடத்தில் உள்ள ஹோட்டலுக்கு வந்த பின், 'மகளை காணவில்லை என, வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. உடனடியாக நான் வீட்டுக்கு செல்ல வேண்டும்' என, நண்பர்களிடம் மைனக் பால் கூறினார். இதையடுத்து, அவரது நண்பர்கள் இருவரும் சுற்றிப் பார்க்க சென்றனர். கடந்த 8ம் தேதி இரவு, மைனக் பால் மனைவி தன் மொபைல் போனில் கணவரை தொடர்பு கொண்டார்; ஆனால் அவர் எடுக்கவில்லை. உடனடியாக, ஹோட்டல் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டார்.இதையடுத்து, ஹோட்டல் ஊழியர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, குளியலறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், மர்மமான முறையில் மைனக் பால் இறந்து கிடந்தார். மேலும் அவரது கை, கழுத்தில் ஆழமான வெட்டு காயங்கள் இருந்தன.இது குறித்து ஊழியர்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மைனக் பால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. அவரது நண்பர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.
07-Nov-2024