உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து; பீகாரை கலக்கும் பிரசாந்த் கிஷோர்; தேர்தலில் புது வாக்குறுதி!

ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து; பீகாரை கலக்கும் பிரசாந்த் கிஷோர்; தேர்தலில் புது வாக்குறுதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீகார் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு மணி நேரத்திற்குள் மதுவிலக்கை ரத்து செய்வேன் வருவேன் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உறுதியளித்துள்ளார்.பூரண மது விலக்கு என்ற கொள்கையை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வரும் நிலையில், இருக்கும் மதுவிலக்கை ரத்து செய்வேன் என்று கூறி வருகிறார் புது கட்சி தலைவரான பிரசாந்த் கிஷோர்.ஜன் சுராஜ் என்ற தனது அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ள இவர், 'மாநிலத்தில் தற்போது உள்ள மதுவிலக்கு கட்டுப்பாடுகள் பயனற்றது. அது சட்டவிரோதமாக மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய வழிவகுத்தது மற்றும் மாநிலத்திற்கு ரூ. 20,000 கோடி கலால் வருவாயை இழந்து இருக்கிறது' என்று கூறியுள்ளார். பிரசாந்த் கிஷோர் மேலும் கூறியதாவது:மாநிலத்தில் தற்போது உள்ள மது மீதான தடையானது நிதீஷ் குமாரின் போலித்தனத்தை காட்டுகிறது. மேலும் மதுவிலக்கு சட்டத்திற்குப் புறம்பாக மதுவை வீடுகளுக்கு டெலிவரி செய்ய வழிவகுத்தது . நான் அக்டோபர் 2 ஆம் தேதி ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியைத் தொடங்குகிறேன். பீகாரில் ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை நீக்கிவிடுவேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

UTHA KUMAR
செப் 16, 2024 13:07

வென் சினி அக்டர்ஸ் அண்ட் அக்ட்ரேஸ் கேன் எனத் பாலிடிக்ஸ் வி நோட் எ பொலிடிகல் அனலிஸ்ட் ஜோஇன் politics..


S MURALIDARAN
செப் 16, 2024 07:41

ஏற்கெனவே நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் சீரழித்தது போதாதென்று இவரும் கிளம்பி விட்டாரா? இதுவும் ஒரு பிழைப்பாகி விட்டது நாட்டில்.


sankar
செப் 15, 2024 21:26

மணி பதினொன்று அஞ்சுக்கு மணல்வண்டிகள் பறக்கும் என்று சொன்னவர் இப்போது உள்ளே மணலை எண்ணிக்கொண்டு இருக்கிறார்


VEERAN VP
செப் 16, 2024 12:55

சூப்பர் டூப்பர்


என்றும் இந்தியன்
செப் 15, 2024 18:13

இதைத்தானே ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்,இந்தியா பூராவும் திருட்டு திராவிட மாடல் என்று


kulandai kannan
செப் 15, 2024 17:09

இதுதான் நியாயமான அரசியல். மற்றவரெல்லாம் இரட்டை வேடம்.


karupanasamy
செப் 15, 2024 16:59

என்னத்துக்கு ஒரு மணிநேரம். இங்க நீட்ட ஒழிக்க ஜஸ்ட் எ கிளிக் away னு சொன்ன மாதிரி சொல்லவேண்டியத்துதானே.


ஆரூர் ரங்
செப் 15, 2024 14:42

இவருக்கும் முதல் கையெழுத்து வியாதியா?


M Ramachandran
செப் 15, 2024 13:30

அப்படியெ இங்கு கொஞ்சம் தமிழ் நாட்டின் பக்கம் வந்து பேசுங்க. திரும்பி பிஹார் செல்ல முடியாது.


சமூக நல விரும்பி
செப் 15, 2024 13:27

பிரஷாந்த் கிஷோர் விட்டலாசாரியாக மாறி விட்டார்.


Balaji Gopalan
செப் 15, 2024 12:14

அடேய், உன்னால நாங்க கடந்த மூன்றரை வருடமா கஷ்டப்பட்டுக்கினு கீறோம் ,, மவனே இன்னொரு முறை தமிழ்நாடு பக்கம் வந்த டப்பா டான்ஸ் ஆடிடும் உனக்கு ஆமாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை