உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் ரூ.58,000 கோடி திட்டங்கள் துவக்கம்

ஆந்திராவில் ரூ.58,000 கோடி திட்டங்கள் துவக்கம்

அமராவதி: ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆந்திராவில் இருந்து தனி மாநிலமாக தெலுங்கானா பிரிந்தபோது, அந்த மாநிலத்துடன் ஹைதராபாத் இணைந்தது.இதனால், ஆந்திரா தலைநகராக அமராவதியை அறிவித்து, அதற்கான பணிகள் துவங்கின. முந்தைய முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் அந்த பணிகள் முடங்கின. தற்போது, மீண்டும் முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றதும் அமராவதி நகரின் மறு கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.இதில், பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றனர்.ஏவுகணை சோதனை தளம், திருப்பதி மற்றும் உதயகிரி கோட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள், பசுமை தலைநகராக அமையும் அமராவதியில் சட்டசபை, தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட கட்டடங்கள் என 58,000 கோடி ரூபாய் மதிப்பிலான 74 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி