உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு; முன்னாள் காங்., எம்.பி.,க்கு மரண தண்டனை விதிக்க வலியுறுத்தல்

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு; முன்னாள் காங்., எம்.பி.,க்கு மரண தண்டனை விதிக்க வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் காங்., எம்.பி., சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.கடந்த 1984 அக்., 31 ல் காங்., மூத்த தலைவரும், அப்போதைய பிரதமருமான இந்திராவை, சீக்கிய பாதுகாவலர்கள் இருவர் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து, கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். டில்லி கன்டோன்மென்ட் பகுதியில் பல சீக்கியர்கள், வன்முறை கும்பல் தாக்குதலில் உயிரிழந்தனர். அந்த ஆண்டு நவ., 1 ல் சரஸ்வதி விஹாரில் இருவரை கொலை செய்தது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜ்ஜன் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ., நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜ்ஜன் குமாரை குற்றவாளி என அறிவித்து டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், முன்னாள் காங்., எம்.பி., சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு என்றும், இது ஒரு முழு சமூகத்தையும் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு உள்ளது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. சீக்கிய கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில், சஜ்ஜன் குமார் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Karthik
பிப் 19, 2025 20:21

இந்திய கொலீஜியம் இந்த குற்றவாளிக்கு இறுதி தீர்ப்பு கொடுக்கும் முன்னரே குற்றவாளி இயற்கை எய்தி இறுதி ஊர்வலம் போயிடுவார் கூடிய சீக்கிரமே . பிறகென்ன..? நீதிமன்றம் எங்கும் ஒரே வசனம்தான் "சிவாஜியின் ஒரே டயலாக்தான் "" சக்ஸஸ் .. சக்ஸஸ்.."


PARTHASARATHI J S
பிப் 19, 2025 18:54

தாமதமாக நீதி வருகின்றது. நமது அரசியல் சாசனமும், நீதிமன்றமும் பெரிய ஓட்டை. கொஞ்சம் நினைத்துப் பார்க்கவும். காந்தியை சுட்ட மாதிரி எவனாவது ( கொலையுண்டவரின் மகனோ,மகளோ ) இவரை செய்துவிடவும் வாய்ப்புக்கள் அதிகம்.


சின்ன சுடலை ஈர வெங்காயம்
பிப் 19, 2025 12:17

இன்றைக்கு தண்டனை முடிவு செய்து தீர்ப்பு. நாளைக்கு எதிர்த்து அப்பீல். ஏற்கனவே 2 வழக்குகள் அப்பீலில் உள்ளன. ஆக ஆக....


ஆரூர் ரங்
பிப் 19, 2025 11:30

இவ்வளவு கொடிய படுகொலை செய்தது தெரிந்த பின்னரும் தொடர்ந்து எம்பி சீட் கொடுத்த காங் தலைமைக்கும் தண்டனை அளிக்க வேண்டும். இவ்வழக்குக்காக போலீசார் இவரைக் கைது செய்ய சென்றபோது காங்கிரஸ் தலைமை பல்லாயிரம் ஊழியர்களை திரளவைத்து கைது செய்யவிடாமல் தடுத்தது வரலாறு.


ஆரூர் ரங்
பிப் 19, 2025 11:25

வயது முதிர்ந்த நபர் என்பதால் மரண தண்டனை அளிக்க மாட்டார்கள். ஜெயிலில் ராஜ வாழ்க்கை வாழ முடியும். இன்னும் ஓராண்டு முடிந்தால் கோர்ட்டே வயதைக் காரணம் காட்டி விடுவித்து விடும்.


சின்ன சுடலை ஈர வெங்காயம்
பிப் 19, 2025 11:00

இதில் முக்கிய பங்கு வகித்தது ஜக்தீஷ் டைட்லர். மாட்டியது இவர்.


RAJA
பிப் 19, 2025 10:58

42 வருடங்களாக இந்த வழக்கை நீட்டித்த சம்பந்தப்பட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கு எந்த தண்டனை விதிக்கலாம்? ஒருவர் குற்றவாளி என்று கூறுவதற்கு நிரூபிப்பதற்கு 42 ஆண்டுகள் தேவையா?


Chidambarakrishnan K
பிப் 19, 2025 10:50

1984 ~ 2025: 41 வருடம் கடந்துவிட்டது. இனி அவருக்கு தண்டனை கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன? நல்ல இருக்குது நம் தேசத்தின் சட்டம்


Premanathan Sambandam
பிப் 19, 2025 10:26

நாற்பது வருடமாக விசாரணை இன்னும் நாலு வருடத்தில் இந்த MP இயற்கை எய்தி விடுவார் நல்ல நீதி பரிபாலனம் நல்லநாடு நல்ல மக்கள் வந்தே மாதரம்


Barakat Ali
பிப் 19, 2025 10:54

நீதித்துறை உட்பட அனைத்துத் துறையிலும் காங்கிரசின் ... பரந்து வியாபித்துள்ளதே காரணம் .....


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 19, 2025 10:25

இந்த செய்தி தமிழகம் என்ற தலைப்பின் கீழ் வந்திருக்கிறதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை