உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் மசூதியை ஆய்வு செய்ய எதிர்ப்பு: கலவரத்தில் 3 பேர் பலி

உ.பி.,யில் மசூதியை ஆய்வு செய்ய எதிர்ப்பு: கலவரத்தில் 3 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சம்பல், நவ. 25-

திசை திருப்பும் முயற்சி

இந்த சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், “சம்பல் வன்முறை சம்பவம், தேர்தல் முறைகேடுகளில் இருந்து கவனத்தை திருப்பும் வகையில் பா.ஜ.,வினரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.“மசூதியில் ஏற்கனவே ஒருமுறை ஆய்வு செய்த பின், இரண்டாவது முறையாக ஏன் ஆய்வு நடத்த வேண்டும்? அதற்காக, அதிகாரிகள் ஏன் காலையிலேயே செல்ல வேண்டும்? தேர்தல் தொடர்பாக எந்த விவாதமும் நடக்காத நிலையில், குழப்பத்தை உருவாக்கவே வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது,” என்றார்.உத்தர பிரதேசத்தில் மசூதியை ஆய்வு சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல் வீச்சில் ஈடுபட்டவர்கள், வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த வன்முறை சம்பவத்தில், மூன்று பேர் பலியாகினர்; 30 போலீசார் காயம் அடைந்தனர். உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இங்கு ஏற்கனவே ஹிந்து கோவில் இருந்ததாகவும், அதை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சம்பல் சிவில் நீதிமன்றம், மசூதியில் ஆய்வு செய்ய உத்தரவிட்டது.இரு தரப்பினர் முன்னிலையில், நீதிமன்ற ஆணையர் மற்றும் அதிகாரிகள் மசூதியை கடந்த 5ம் தேதி ஆய்வு செய்தனர். இதையடுத்து, இரண்டாவது முறையாக ஆய்வு செய்ய, மசூதிக்கு நேற்று காலை 7:00 மணிக்கு அவர்கள் சென்றனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர், அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பேச்சு நடந்து கொண்டிருந்த போதே கூட்டத்தில் இருந்த சிலர், அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். ஒரு சிலர், அங்கிருந்த இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்தனர். இதையடுத்து, அப்பகுதியே போர்க்களமாக மாறியது. அதிகாரிகளை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்ற போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். சில மணி நேரப் போராட்டத்துக்கு பின் நிலைமை கட்டுக்குள் வந்தது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் பலியாகினர்; 30 போலீசார் காயமடைந்தனர்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வன்முறையில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வன்முறை சம்பவங்கள் கட்டுக்குள் வந்ததை அடுத்து, திட்டமிட்டபடி மசூதியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வு நடவடிக்கை முழுதும் புகைப்படம் மற்றும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் அதிகாரிகள் நாளை சமர்ப்பிக்க உள்ளனர். இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜன., 29க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திசை திருப்பும் முயற்சி

இந்த சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், “சம்பல் வன்முறை சம்பவம், தேர்தல் முறைகேடுகளில் இருந்து கவனத்தை திருப்பும் வகையில் பா.ஜ.,வினரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.“மசூதியில் ஏற்கனவே ஒருமுறை ஆய்வு செய்த பின், இரண்டாவது முறையாக ஏன் ஆய்வு நடத்த வேண்டும்? அதற்காக, அதிகாரிகள் ஏன் காலையிலேயே செல்ல வேண்டும்? தேர்தல் தொடர்பாக எந்த விவாதமும் நடக்காத நிலையில், குழப்பத்தை உருவாக்கவே வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

SUBBU,
நவ 25, 2024 12:45

அந்தக் காலத்தில் முஸ்லீம்கள் நீல நிற மசூதியை கட்டியிருக்கலாம், கிறிஸ்தவர்கள் நோட்ரே டேமைக் கட்டியிருக்கலாம், அதே போல பௌத்தர்கள் சாஞ்சியின் துருப்பிடிக்காத பெரிய இரும்பு ஸ்தூபியைக் கட்டியிருக்கலாம், ஆனால் மசூதிகளுக்கு கீழே கோயில்கள் கட்டும் தனித்துவமான தொழில்நுட்பம் இந்துக்களுக்கு மட்டுமே இருந்திருக்கிறது.


Anonymous
நவ 25, 2024 16:18

மசூதிக்கு கீழே கோவில் கட்டல, கோவிலுக்கு மேல மசூதி கட்டி இருக்காங்க, புரியாதவங்களுக்கு புரிய வைக்கலாம், புரியாத மாதிரி நடிக்குறவங்களுக்கு?.........


Dharmavaan
நவ 25, 2024 08:47

ஜிகாதி மூர்க்க மிருகங்கள் நாட்டிற்கு ஆபத்தானவை அழிக்கப்பட வேண்டும்


V RAMASWAMY
நவ 25, 2024 08:31

மசூதிகள் இந்து ஆலயங்களை இடித்து கட்டப்பட்டிருக்கின்றன என்று ஆய்வில் தெரியவருமாதலால் பயம் கவ்வி வருகிறது.


அனந்த ராமன்
நவ 25, 2024 07:54

இந்த முஸ்லிம் வன்முறை அபுதாபி யாதவை சிறையில் அடைக்க வேண்டும் உபியில் நடக்கும் தேச விரோத, இந்து விரோத சக்திகளை ஊக்குவிப்பது இவரும் இவர் அப்பா தொடங்கிய கட்சிதான்.


Barakat Ali
நவ 25, 2024 07:51

கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டது நமது தரப்பு நியாயம் என்றால் மசூதியை இடித்து கோவில் மீட்கப்படவேண்டியது அவர்களது நியாயமே .....


பேசும் தமிழன்
நவ 25, 2024 07:41

நீதிமன்றம் உத்தரவின் பேரில் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து கலவரம் செய்யும் கும்பலை சுட்டு கொல்ல வேண்டும். இவர்கள் நடவடிக்கை எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது. தவறு இருப்பதால் தானே... அதனை மறைக்க இப்படி நடந்து கொள்கிறார்கள் ???


அப்பாவி
நவ 25, 2024 05:15

வல்லான் வகுத்ததே வாய்க்கால்.


J.V. Iyer
நவ 25, 2024 04:54

இந்த தேச விரோதிகளையும், பயங்கரவாதிகளையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.


Rajinikanth
நவ 25, 2024 03:49

ஏன் டா உபீஸ் உத்திர பிரதேசத்தன்ஸ் உங்களுக்கு லாம் போய் புள்ள குட்டிய படிக்க வெக்கைர வேலை இல்லையா?


Nandakumar Naidu.
நவ 25, 2024 01:16

கலவரம் செய்வத்க்கென்றே பிறந்தவர்கள். இவர்கள் மனித சமுதாயத்திர்க்கு பேராபத்து.


புதிய வீடியோ