உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போராட்டம் நீடிக்கலாம்: கெஜ்ரிவால்

போராட்டம் நீடிக்கலாம்: கெஜ்ரிவால்

புதுடில்லி: அரசின் அணுகுமுறையைப்பொறுத்து, அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் 15 நாட்களுக்கு மேலும் செல்லலாம் என அவரது ஆதரவாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், மிக நீண்ட போராட்டம் நடத்த தாங்கள் முதலில் முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் சட்ட பிரச்னைகள் காரணமாக 15 நாட்கள் போராட்டம் நடத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். அதே சமயம் எங்கள் போராட்டம் குறித்த அரசின் அணுகுமுறையைப் பொறுத்து இந்த போராட்டம் மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை