மேலும் செய்திகள்
மேற்கு வங்க மக்கள் பாஜவை அனுமதிக்க மாட்டார்கள்: மம்தா பதிலடி
6 hour(s) ago | 19
தாவணகெரே : போலீஸ் நிலையம் முன் உடலை வைத்து போராட்டம் நடத்தியதாக, தலித் வாலிபர்கள் 13 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.தாவணகெரே சென்னகிரி கொடகிகெரே கிராமத்தில் வசித்தவர் சேகரப்பா, 50. தலித் சமூகத்தை சேர்ந்தவர். சந்திரசேகர் என்பவரின் நிலத்தில் விவசாய வேலை செய்தார். வேலைக்காக முன்கூட்டியே பணம் வாங்கி உள்ளார். ஆனால் வேலைக்கு சரியாக செல்லவில்லை. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், கடந்த 27ம் தேதி சேகரப்பாவின் மீது, சந்திரசேகர் பைக்கை கொண்டு மோதினார்.படுகாயம் அடைந்தவர், மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல், நேற்று முன்தினம் இறந்தார். இதுபற்றி அறிந்த சந்திரசேகர் தலைமறைவாகிவிட்டார். அவரை உடனே கைது செய்ய கோரி, சேகரப்பாவின் உடலை, சென்னகிரி போலீஸ் நிலையம் முன்வைத்து, தலித் சமூக வாலிபர்கள் 13 பேர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். முன்னதாக போலீசாருக்கும், வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.இந்நிலையில் பணி செய்யவிடாமல் தடுத்ததாக 13 வாலிபர்கள் மீதும் சென்னகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
6 hour(s) ago | 19