உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை: சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி கடிதம்

140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை: சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'உங்கள் சாதனைகளால் 140 கோடி இந்தியர்களும் பெருமை அடைகின்றனர்,' என்று விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு அனுப்பிய கடிதத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அவர் சென்ற விண்கலன் பழுதாகி போனதால் மாதக்கணக்கில் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yb3ddunv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது எலான் மாஸ்க் நிறுவனத்தின் விண்கலன் மூலம் அவர் பூமி திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை அவர் வரும் விண்கலம் பூமியில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம்: நான் இந்திய மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது சாதனைகளால் 140 கோடி இந்தியர்கள் பெருமை அடைகின்றனர். நீங்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், எங்கள் இதயத்துக்கு மிக நெருக்கமாகவே இருக்கிறீர்கள்.உங்கள் உடல் நலத்துக்காகவும், உங்கள் பயணம் வெற்றிகரமாக நிறைவேறவும் இந்திய மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கின்றனர்.நான் அமெரிக்க அதிபர் டிரம்ப், பைடன் ஆகியோருடன் பேசும் போதெல்லாம் உங்களது நலம் பற்றி தொடர்ந்து விசாரித்து வந்தேன்.நீங்கள் பூமிக்கு திரும்பியதும், இந்தியாவுக்கு வருவீர்கள் என்று நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மிகவும் பெருமைக்குரிய மகள் ஒருவரை தங்கள் நாட்டுக்கு வரவேற்பதில் இந்தியா மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. நீங்களும், வில்மோரும் பத்திரமாக பூமியை வந்தடைய எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Senthoora
மார் 22, 2025 13:47

அந்த கடித்ததை குப்பையில் போட்டிருப்பார், அவருக்கு ஹரேன் ரெட்டியின் மரணத்துக்கு விளக்கம் வேண்டுமாம்.


thangam
மார் 19, 2025 04:33

நமக்கு என்ன பெருமை? இப்படி அடுத்தவங்க சாதனைக்கு மட்டுமே பெருமை பட்டுகிட்டே இருந்தால் போதுமா நாம் என்னைக்கு சாதனை பண்ணி பெருமை பட்டுகிறது?


Appa V
மார் 19, 2025 02:09

Astronauts headed back to Earth can say goodbye to blurry eyes, puffy faces, ‘chicken legs’ and a little extra height


essemm
மார் 19, 2025 02:01

சுனிதா அவர்களிநலமுடன். நீண்டஆயுளுடன். நீண்ட நாட்களுக்கு வாழ்கவேண்டும். இது ஒத்து மொத்த இந்திய மக்களுக்கும் கிடைக்கும் வெற்றியாகும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 19, 2025 01:07

அவர் இந்தியக்குடிமகளாக இல்லாதபோது எப்படி இந்தியர்களுக்குப் பெருமை ??


Prabu V
மார் 18, 2025 21:03

She is a role model for womens courage Big Salute


Ramesh Sargam
மார் 18, 2025 20:50

140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை. அதில் ஒரு சில தேசதுரோகிகளுக்கு பெருமை இல்லை.


अप्पावी
மார் 18, 2025 20:39

இன்னும் 140 கோடிலயே இருக்காரே. இனிமே எப்போ சென்சஸ் எடுத்து , எப்போ 150 கோடி 155 கோடிந்னு பேசி, எப்போ தமிழ்நாடு தொகுதி எண்ணிக்கைய குறச்சு...


HoneyBee
மார் 18, 2025 21:53

முரசொலி கூட்டம் இப்படி தான் இருக்கும்


Raj Kumar
மார் 18, 2025 19:59

திருட்டுத்தனமா போனா ..... இப்படித்தான் அனுப்புவான்


Sridharan Venkatraman
மார் 18, 2025 19:57

தக்க அனுமதி இல்லாமல் நுழைபவை விலங்குகள். விலங்கு போட்டு தான் விலங்குகளை அனுப்ப வேண்டும். அழைத்து வர வேண்டும்.