உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., - சி 58 ராக்கெட் வான்வெளியின் செயல்பாட்டை ஆய்வு செய்யும்

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., - சி 58 ராக்கெட் வான்வெளியின் செயல்பாட்டை ஆய்வு செய்யும்

சென்னை: 'பி.எஸ்.எல்.வி., - சி 58' ராக்கெட் வாயிலாக, 'எக்ஸ்போசாட்' செயற்கைக்கோளை, 'இஸ்ரோ' நிறுவனம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இஸ்ரோ தலைவர் பாராட்டு !

செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது, எக்ஸ்போசாட் தனது ஆய்வு பணியை துவக்கியது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு நன்றியும் ,பாராட்டும் அவர் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v601kvem&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. இங்குள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி 58 ராக்கெட் வாயிலாக, 'எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக்கோள், இன்று காலை 9:10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.ஸ்போசாட் செயற்கைக்கோளில், 'எக்ஸ்ஸ்பெக்ட், பொலிக்ஸ்' போன்ற அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. மொத்தம், 469 கிலோ எடை உடைய செயற்கைக்கோள், பூமியில் இருந்து, 650 கி.மீ., தொலைவில் உள்ள புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும்.இந்த செயற்கைக்கோள், வானியலின் இயக்கம், விண்வெளியில் காணப்படும் நிறமாலை, துாசு, செயலில் உள்ள விண்மீன் கருக்கள், மேகக்கூட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும்.இந்தாண்டு முதலாவதாக ஏவப்படும், பி.எஸ்.எல்.வி., - சி 58 ராக்கெட், பி.எஸ்.எல்.வி., வகையில் 60வது ராக்கெட். இதன் உயரம் 44.4 மீட்டர். இந்த ராக்கெட், எரிபொருள், செயற்கைக்கோள் என, மொத்தம் 260 டன் எடை கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

NALAM VIRUMBI
ஜன 01, 2024 14:31

ISRO is in internationally acclaimed space organisation.


கனோஜ் ஆங்ரே
ஜன 01, 2024 13:47

இந்தப் பக்கம் விண்ணில் ராக்கெட் விடுறானுங்க... அந்தப் பக்கம் ராமருக்கு பல நூறு கோடிகளில் ராமருக்கு கோவில் கட்டுறாங்க..? இவங்கள புரிஞ்சிக்கவே முடியலையே.....? விண்ணில் பறக்குற ராக்கெட்... ராமர் இருக்குற விண்ணுலகத்துக்கு போய் சேருமா...?


Ramesh Sargam
ஜன 01, 2024 10:33

புத்தாண்டில் புதிய சாதனை படைக்கும் முதல் நாடு இந்தியா. வாழ்த்துக்கள் அனைத்து தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும். நாம் விண்ணை நோக்கி பார்க்கிறோம் - சாதனை படைக்க. மற்ற நாடுகள் நம்மை நோக்கி பார்க்கின்றன - ஆஹா, இந்தியா எப்படி எல்லாம் விண்ணில் சாதிக்கிறது என்று. ஜெய் ஹிந்தி. வந்தே மாதரம்.


Hari
ஜன 01, 2024 09:59

இந்தியா அரசுக்கு வாழ்த்துக்கள்


duruvasar
ஜன 01, 2024 09:33

மற்றுமோர் சாதனை மயில்கல். வாழ்த்துக்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை