உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று பொது விடுமுறை: உ.பி. அரசு அறிவிப்பு

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று பொது விடுமுறை: உ.பி. அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: வரும் 22ல் நடக்கவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஜன.22-ம் தேதி பொது விடுமுறை நாளாக உ.பி.அரசு அறிவித்துள்ளது.உபி. மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து வரும் 22-ம் தேதி திறக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நாடு முழுதும் வி.ஐ.பி.க்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.கும்பாபிஷேகத்தையொட்டி உ.பி. அரசு ஜன.22-ம் தேதியை பொதுவிடுமுறையாக அறிவித்து உள்ளது. இது தெடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷே கத்தையொட்டி மாநிலத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் , வர்த்தக நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bhakt
ஜன 09, 2024 23:12

22 முதல் தீய அரக்கர்களின் அழிவு ஆரம்பம்.


r ravichandran
ஜன 09, 2024 22:44

ஆரூர் ரங் கூறியது சரியான கருத்து. பாராட்டுகள்.


Seshan Thirumaliruncholai
ஜன 09, 2024 21:43

தி மு க இருதலை கொள்ளிபோல் உள்ளது. ஸ்டாலின் உதயநிதி கனிமொழியை தவிர மற்ற பெருபான்மையோர்அமைச்சர்கள் உட்பட ஆன்மிக உணர்வு கொண்டவர்கள். இவர்கள் தாங்கள் ஹிந்து என்று மக்கள் உணர வாய்ப்பு.கும்ப விழா அன்று மத சின்னம் இட்டு திருக்கோயில்களுக்கு செல்லவேண்டும். தி மு க தலைமை வாக்கு வங்கியை கருத்தில்கொண்டு மௌனம் காட்டும். ஸ்டாலின் துணைவியார் அயோத்தி செல்கிறார் என்பது செய்தி.


T.sthivinayagam
ஜன 09, 2024 21:24

மாண்புமிகு முதல்வர் பொது விடுமுறை விடுவது போல் பொதுவான ஹிந்துக்களும் அரச்சகர் ஆக இறை பணி செய்ய உத்தரவு இடவேண்டும் என்று ஹிந்துக்கள் விரும்புகின்றனர்.


ஆரூர் ரங்
ஜன 09, 2024 21:44

ராமர் க்ஷத்திரிய குடும்பம். அவருடைய குரு விஸ்வாமித்திரரும் அதே. ராமர் தனது உடன்பிறவா சகோதரர்களாக எண்ணியது மீனவர் குகன், குரங்கு வம்ச சுக்வரீன், ராட்சச வம்சா வீடணன் ஆகியோர்????. இவர்களுக்கு இவர்களை விட உயர்ந்த குலத்து அர்ச்சகர்கள் பூசை செய்வதே சமூகநீதிதான்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை