உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்

புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்

புவனேஸ்வர்: ஒடிசா புரி ஜெகந்நாதர் கோவில் திருவிழாவில் ஒரே சமயத்தில் பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கிய 600க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நேற்று (ஜூன் 27) கோலாகமாக துவங்கியது. புரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம், துவங்கி ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c2mq9nfs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் ரதயாத்திரைக்கான சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெய்வங்கள் அவரவர் தேர்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பிரமாண்டமான பஹந்தி ஊர்வலம் நடைபெற்றது.ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோவிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோவில் வரை இழுக்கப்படும். 9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோவிலுக்கு இழுத்துவரப்படும்.இந்த ரத யாத்திரையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே சமயத்தில் குவிந்தனர். இதனால், கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, பாலகன்டி பகுதியில் தேர் சிக்கிக் கொண்டது. இந்த நிலையில், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 70 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்; 625 பக்தர்கள் வாந்தி, மயக்கம் மற்றும் சிறு காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஜூன் 28, 2025 20:21

பக்தி மூட நம்பிக்கையாக மாறும் போது ஏற்படும் விளைவுகள் இவை தான்!


அப்பாவி
ஜூன் 28, 2025 19:25

கூட்டமா அது? இல்லை புற்றீசல். டேமேஜ் சர்வ சாதாரணம். ஜெய் ஜகன்னாத்னு போய்க்குட்டே இருக்கணும்.


ஆரூர் ரங்
ஜூன் 28, 2025 14:39

ஊரே கொள்ளாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் வந்துள்ளது. தேர் நகர்ந்து செல்லவே இடமில்லை. இனிமேல் ஈபாஸ் மூலம்தான் ஊருக்குள் பக்தர்களை அனுமதிக்க வேண்டிய நிலைமை. ஸ்ரீ ஸ்ரீ ஜகன்னாதா இதற்கு ஒரு தீர்வு சொல்.


Ramesh Sargam
ஜூன் 28, 2025 11:56

வொவொரு வருடமும் அங்கு இந்த விழா. கோவில் நிர்வாகம், மாநில அரசு மற்றும் காவல்துறையினர் போதிய தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாமல் இருக்க. எங்கே எடுக்கிறார்கள்? எப்படா பிரச்சினை ஆகும், அரசியல் செய்யலாம் என்று எதிர்க்கட்சியினர் ஆவலுடன் இருப்பார்கள். அவர்கள் எண்ணத்தை முறியடிக்கவாவது மாநில அரசு செயல்படவேண்டும் முன்னெச்சரிக்கை எடுத்து.


GMM
ஜூன் 28, 2025 11:15

விழா ஏற்பாட்டில் பாதுகாப்பு மிக முக்கியம். தேச விரோதம் நிழலாக செயல்படுகிறது. நிச்சயம் கூடத்தில் கலந்து விடுவர். ஒரு புதிய ஊர் சென்றால் தங்க தவியாய் தவிக்கிறோம். ஆனால் அந்நிய நாட்டவர் தங்கி, குடியிருந்து ஓட்டுரிமை பெற முடியும். உள் நாட்டில் ஆதரவாளர்கள் அதிகம். ? திராவிட ஆசியில் தமிழகத்தில் சிறுபான்மை வழிபாடு ஸ்தலம் ஒருவருக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் கட்டப்பட்டு வருகிறது.


முருகன்
ஜூன் 28, 2025 12:10

இதோ எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் என்றால் இந்நேரம் பல எதிர் கருத்துக்கள் வந்து இருக்கும் மாநில அரசின் அலட்சியமே காரணம்


subramanian
ஜூன் 28, 2025 09:15

இதுவும் சதி வேலை. கெட்ட எண்ணம் கொண்டு பாரத மக்களுக்கு தீங்கு செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் தீவினை அனுபவிப்பர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை