உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குருவாயூர் கோவில் குளத்தில் சுத்திகரிப்பு சடங்கு: தேவஸ்தானம் அறிவிப்பு

குருவாயூர் கோவில் குளத்தில் சுத்திகரிப்பு சடங்கு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: குருவாயூரின் புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலின் புனித குளத்தில் நாளை (ஆகஸ்ட் 26) சுத்திகரிப்பு சடங்கு நடத்தப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.குருவாயூரின் புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலின் புனித குளத்தில், ஹிந்து அல்லாத பெண், புனித குளத்தில் கால் கழுவுவதை காட்டும் ஒரு ரீல்ஸ் எடுத்து, அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி, இது மத விதிமுறைகளை மீறும் செயல் என்று கண்டிக்கப்பட்டு பொதுமக்களின் கொந்தளிப்புக்கு வழிவகுத்தது. இதனை தொடர்ந்து அந்த பதிவை நீக்கிய அந்தப் பெண் மன்னிப்பு கேட்டார்.இந்நிலையில் குருவாயூர் தேவஸ்தானம் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:குருவாயூர் கிருஷ்ணர் கோவிலின் புனித குளத்தில் நாளை(ஆகஸ்ட் 26) சுத்தம் செய்யப்பட்டும் சடங்குகள் நடைபெற உள்ளது. இதை ஒட்டி கோவிலின் தரிசனம் அதிகாலை 5 மணி முதல் நண்பகல் வரை கட்டுப்படுத்தப்படுகிறது.சடங்குகள் முடிந்த பிறகு மாலையில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள். பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு தேவஸ்தானம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

அப்பாவி
ஆக 26, 2025 13:20

அந்தம்மா உண்டியல்ல டாலர், யூரோ போட்டா எடுத்து வெச்சிப்பாங்க. லஷ்மிக்கு தோஷம் கொடையாதாம். அதுவும் ஃபாரின் லஷ்மியாச்சே...


பெரிய ராசு
ஆக 26, 2025 22:25

குண்டுவைக்கிற கபோதிக்கு கோவிலை பற்றி என்ன கருத்து


venugopal s
ஆக 26, 2025 13:06

இது வெட்டி வேலை, சாஸ்திரப்படி நீருக்கு தோஷம் கிடையாது!


Kanns
ஆக 26, 2025 08:16

Better Convert that Lady to Great Plural-Accommodative-Polytgeistic Hinduism


Kasimani Baskaran
ஆக 26, 2025 04:01

அந்தப்பெண்ணை இந்துவாக மாற்ற சடங்கு செய்து விட்டால் ஒரு வேளை குருவாயூரப்பன் மன்னிக்க வாய்ப்பு இருக்கிறது.


aaR Kay
ஆக 26, 2025 00:36

அந்தம்மா வீட்டில் ஒரு பத்து பங்களாதேஷியினரை குடி வையுங்கள் பிறகு பார்ப்போம்...


Sivagiri
ஆக 26, 2025 00:01

பத்து பதினைந்து ஆண்டுகள் முன்பு வரை , தமிழ்நாட்டின் எல்லா கோவில் குளங்களுமே , குளிக்க , துவைக்க , மாடுகள் குளிக்க இப்படித்தான் இருந்தது , வடபழனி கோவில் குளம் எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும் . . இப்போதுதான் கொஞ்சம் விழிப்புணர்வு வந்துள்ளது .. .


Anbuselvan
ஆக 25, 2025 23:31

அதுதான் திராவிட மாடல்


உண்மை கசக்கும்
ஆக 25, 2025 23:02

சில நாட்கள் முன்பு ஜோதிகா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் என்ற செய்தி வந்ததே.


V Venkatachalam
ஆக 26, 2025 08:59

அந்த பொம்பிளையை கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை பின்பற்றிதானே அனுமதி கொடுத்திருக்கும்.அதனால அதில் கேள்வி கேட்க என்ன இருக்கு?


ரங்ஸ்
ஆக 25, 2025 22:36

தெய்வம் நின்று கொல்லும்.


எஸ் எஸ்
ஆக 25, 2025 22:22

நம்ம ஊர் கோவில் குளக்கரையில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டால் கூட ஏன் என்று கேட்க முடியாது. சில மாதங்கள் முன் சென்னையில் ஒரு பெருமாள் கோவிலில் மண்டபத்தில் அமர்ந்து ஒரு மாற்றுமத இளைஞர் பிரியாணி சாப்பிட்டு வலைதளங்களில் பதிவு செய்தார். அறநிலையத்துறை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை