உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம்ஆத்மி ஊழல் கட்சியாக மாறிவிட்டது: டில்லி அமைச்சர் ராஜினாமா

ஆம்ஆத்மி ஊழல் கட்சியாக மாறிவிட்டது: டில்லி அமைச்சர் ராஜினாமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் ஆளும் ஆம்ஆத்மி கட்சியின் அமைச்சராக உள்ள ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். ஆம்ஆத்மி கட்சி ஊழல் கட்சியாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.டில்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இதில் புதிய மதுபான கொள்கை நடைமுறைப்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக அக்கட்சியின் அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர குமார் ஜெயின் ஆகியோரை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், சமீபத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் கைது செய்தது. இது நாடு முழுவதும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஊழல் கட்சி

இந்த நிலையில் டில்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து இன்று (ஏப்.,10) விலகினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி ஊழலை எதிர்த்துப் போராட துவங்கப்பட்டது. ஆனால் இன்று அந்த கட்சி ஊழலில் சிக்கித் தவிக்கிறது. அமைச்சர் பதவியில் பணியாற்றுவது எனக்கு கடினமாகிவிட்டது. ஊழல் என்ற பெயருடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை. எனவே, அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளேன்.'அரசியல் மாறினால் நாடு மாறும்' என பேசியவர் முதல்வர் கெஜ்ரிவால். இன்று அரசியல் மாறவில்லை, அரசியல்வாதி மாறிவிட்டார். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக நான் அமைச்சரானேன். தலித்துகளின் பிரதிநிதித்துவத்தை தடுத்து நிறுத்தும் கட்சியில் தான் நீடிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Azar Mufeen
ஏப் 11, 2024 08:15

இப்படி பேசிட்டு பிஜேபி கட்சியில சேர்ந்திட்டு சால்வை போடுவ. டெல்லியில AAP வெற்றி உறுதி


krishna
ஏப் 10, 2024 22:13

OOZHALIN OOTRUKAN KEJRIWAL AND AAP.


முருகன்
ஏப் 10, 2024 20:52

ஜெயிலுக்கு போவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் இவர் இனி புனிதர்


krishna
ஏப் 10, 2024 22:14

MURUGAN EPPADI SENTHIL BALAJ ULAGA MAHA PUNIDHAR AANADHAI POLAVAA.BESH BESH.NERMAI MANASAATCHI UNGAL KUMBALUKKUN VEPPANGAI.


Soundararajan
ஏப் 10, 2024 20:12

புள்ளி கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார்?? இதை சொல்லக்கூட துப்பில்லாத கூட்டம் ஆட்சியை பிடிக்க நினைக்கிறது


Nagarajan D
ஏப் 10, 2024 19:31

எந்த கட்சியில் சேரப்போகிறானானோ இவன் பதவியில்லாமல் இருக்க முடியாதே?


வாய்மையே வெல்லும்
ஏப் 10, 2024 19:15

கசாப்பு கைமா ஆவரத்துக்கு முன்னாலேயே கூட்டத்தை கலைச்சிறணும் டா சாமியோவ்உயிர் முக்கியம் ஊழல் செய்வது இரண்டாம் பட்சம் என்பது இந்த டில்லி அமைச்சரின் நெஞ்சின் குரலாக எடுத்துக்கொள்ளலாம்


தாமரை மலர்கிறது
ஏப் 10, 2024 18:58

திமுகவை விட பெரிய ஊழல் கட்சி எதுவென்று கேட்டால், இவ்வுலகில் உள்ள ஒரே ஒரு மாபெரும் ஊழல் கட்சி ஆம் ஆத்மீ மட்டும் தான்


Indhuindian
ஏப் 10, 2024 18:17

முஷுகுகின்ற கப்பல்லேந்து எலிகள் வெளியேறத்தொடங்கிவிட்டது


HoneyBee
ஏப் 10, 2024 18:11

பயம் பயம் தவிர வேறு எதுவும் இல்லை தப்பு செய்யலன்னா ஏன் பயப் படுகிறான்


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை