மேலும் செய்திகள்
தேசிய நலன் மீதான பற்றால் உச்சத்தை தொட்டவர் பிரதமர் மோடி; அமித் ஷா
4 hour(s) ago | 2
இளம்பெண் தற்கொலை முயற்சி
5 hour(s) ago
சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்
5 hour(s) ago
லக்னோ: உத்தரபிரதேசத்தில் வெறிநாய் கடித்து எருமை பலியான நிலையில், அதன் பாலால் தயாரிக்கப்பட்ட ரைத்தாவை சாப்பிட்ட கிராம மக்கள் தடுப்பூசிக்காக மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.கடந்த டிசம்பர் 23ம் தேதி பதாவூன் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட விருந்தில், கிராம மக்களுக்கு எருமை மாட்டு பாலில் தயாரிக்கப்பட்ட ரைத்தா பரிமாறப்பட்டது. இதனை ஏராளமான மக்கள் சாப்பிட்டனர். இதனிடையே, ரைத்தாவுக்கு பயன்படுத்தப்பட்ட பாலை கறந்த எருமை மாடு, தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு, டிசம்பர் 26ம் தேதி உயிரிழந்ததாக தகவல் பரவியது.இதனால், பீதியடைந்த மக்கள் கிராமத்தில், தடுப்பூசி கேட்டு அங்குள் சுகாதார மையத்தில் குவிந்தனர். வெறிநாய்க்கடி தடுப்பூசி கேட்டு ஒரே சமயத்தில் ஏராளமானோர் குவிந்ததால் மருத்துவர்களும், நர்சுகளும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.இதையடுத்து, கிராமத்திற்கு விரைந்த சுகாதாரத் துறையினர், மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, தடுப்பூசிகளை செலுத்தினர். இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது; காய்ச்சிய பால் மூலம் நோய் பரவுவது சாத்தியமில்லாத ஒன்று. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்தது. இதுவரை கிராமத்தில் நோய் எதுவும் பதிவாகவில்லை, வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.
4 hour(s) ago | 2
5 hour(s) ago
5 hour(s) ago