உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காரை உரசியது ஆட்டோ; கொந்தளித்த ராகுல் டிராவிட்!

காரை உரசியது ஆட்டோ; கொந்தளித்த ராகுல் டிராவிட்!

பெங்களூரு; கர்நாடகாவில் தன் கார் சேதம் அடைந்ததால் கோபம் அடைந்த மாஜி கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்தார்.பெங்களூருவில் உள்ள கன்னிங்ஹாம் சாலையில் தமது காரில் மாஜி கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் வந்த சரக்கு ஆட்டோ ஒன்று வேகமாக உரச காரின் முன்பகுதி லேசமாக சேதம் அடைந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=egfi0bfi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காரில் இருந்து இறங்கிய டிராவிட், ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சம்பவத்தை அறிந்து அப்பகுதியினர் கூடினர். பின்னர், டிரைவரின் வீட்டு முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை பெற்றுக் கொண்ட டிராவிட், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் எவ்வித புகாரும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் டிராவிட் வாக்குவாதம் செய்ததை கண்ட ஒருவர், நடந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை