உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு தொகுதியில் ராகுல் வேட்புமனு தாக்கல்

வயநாடு தொகுதியில் ராகுல் வேட்புமனு தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: தொண்டர்கள் புடைசூழ காங்கிரஸ் எம்.பி ராகுல் பேரணியாக சென்று, கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் காங்., பொதுச்செயலாளரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்காவும் சென்றார்.கேரளாவில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்., போட்டியிடுகிறது. இவர்களுக்கு எதிராக முக்கியமாக இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றன. வயநாடு தொகுதி காங்., வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து இந்திய கம்யூ., சார்பில் அதன் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். இது இண்டியா கூட்டணியில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2xh9537n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தொண்டர்கள் புடைசூழ காங்கிரஸ் எம்.பி ராகுல் பேரணியாக சென்றார். பேரணியில் ராகுலை தொண்டர்கள் வழிநெடுக வரவேற்றனர். ராகுலுடன் அவரது சகோதரியும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா, மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் உடன் வந்தனர். பின்னர் ராகுல் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தமிழகம் வருகிறார் ராகுல்

தேர்தல் பிரசாரம் செய்ய ஏப்ரல் 12ம் தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல் தமிழகம் வருகிறார். அவர் ஏப்ரல் 12ம் தேதி திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். அன்று மாலை கோவையில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உடன் ராகுல் பங்கேற்க உள்ளார்.

வயநாடு மக்களுடன் நான்!

பேரணியில் ராகுல் பேசியதாவது: வயநாடு தொகுதி எம்.பியாக இருப்பது எனக்கு கிடைத்த கவுரவம். நான் உங்களை ஒரு வாக்காளர் போல் நடத்தவில்லை. வயநாட்டில் எனக்கு சகோதரிகள், அம்மாக்கள், அப்பாக்கள் மற்றும் சகோதரர்கள் உள்ளனர். அதற்காக நான் நன்றி கூறுகிறேன். வயநாட்டில் மருத்துவக் கல்லூரி பிரச்னை உள்ளது. இந்த போராட்டத்தில் வயநாடு மக்களுடன் நான் நிற்கிறேன். மருத்துவக் கல்லூரி தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தோம். வயநாட்டில் உள்ள ஒவ்வொருவரும் எனக்கு அன்பும், பாசமும், மரியாதையும் அளித்து, என்னை சொந்தம் கொண்டாடினார்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 04, 2024 13:50

ஜந்து வருடங்கள் எம்பி ஆக வயநாட்டில் இருந்து விட்டு மருத்துவ கல்லூரி பிரச்சினை தீர்க்காமல் இனி இவரை மறுபடியும் எம்பி ஆக்கி ஜந்து வருடங்கள் வயநாடு மக்கள் பொருத்திருந்து மருத்துவ கல்லூரி பிரச்சினை தீர்த்து கொள்ள வேண்டும் திரு ராகுல் காந்தி அவர்கள் வயநாட்டில் இந்தி கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியை எதிர்த்து தனக்கு வாக்கு கேட்பார் தமிழ்நாட்டில் வந்து அதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியோடு இணைந்து தனது காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு கேட்பார் கேரளாவில் பகை தமிழகத்தில் நண்பர் பாராளுமன்றத்தில் கேரளா என்று வரும் போது காங்கிரஸ் கம்யூனிஸ்ட் சண்டை போட்டு கொள்வர் தமிழகம் என்று வந்தால் உடனை தோள் மீது கை போட்டு கொண்டு தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் எல்லாம் கொள்ளை அடித்து கேராளாவிற்கு கொண்டு போவார்கள் இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் காங்கிரஸ் கட்சியும் மக்களே உஷாராக இருங்கள் இந்த இரு முகம் கொண்ட கட்சியினருடன் ஊரு ரெண்டு பட்டாள் கூத்தாடிக்கு கும்மாளம் என்பது போல இரண்டு முரண்பட்ட கட்சிகளை வலப்புறம் ஒருவரும் இடப்புறம் ஒருவரும் வைத்து கொண்டு தினம் தினம் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கேராளா போய்கொண்டு உள்ளது வாளையார் சோதனை சாவடி வந்தால் நீங்கள் கண்கூடாக காணலாம்


பேசும் தமிழன்
ஏப் 03, 2024 18:57

பேசாமல் இந்தி கூட்டணியை இழுத்து மூடி விட்டு..... யார் பெரியவன் என்பதை அடித்து காட்டு !!!


Jysenn
ஏப் 03, 2024 15:30

Gaza is another safest place for him Even better than Waynad or Malappuram


duruvasar
ஏப் 03, 2024 14:05

கோவை பொதுக்கூட்டத்தில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மறுபடியும் ராகுலை பிரதம மந்திரி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் இது அவருடைய திராணிக்கும் தெம்பிற்க்கும் ஏற்பட்டுள்ள சவால் செய்வாரா வாழும் வள்ளுவர்


kumarkv
ஏப் 03, 2024 13:57

கேரளாவிற்கு இனிமேல் தான் கேடு காலம்


Lion Drsekar
ஏப் 03, 2024 12:52

இது அவர்கள் நாடு வெற்றி நிச்சயம் வந்தே மாதரம்


Amsi Ramesh
ஏப் 03, 2024 12:47

பாஜ,வை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை தோற்கடித்து ராகுல் வயநாட்டில் போட்டியிடுவது பொருத்தமற்றது


Amsi Ramesh
ஏப் 03, 2024 12:46

உஊஊ


எவர்கிங்
ஏப் 03, 2024 12:42

இந்த முறை குறைந்த பட்ச உறுதி கூட இல்லாத ...


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ