உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் ராகுல் பாதயாத்திரை; காங்., கட்சியினர் மோதல்

பீஹாரில் ராகுல் பாதயாத்திரை; காங்., கட்சியினர் மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா : பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று பீஹார் வந்த காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, மாநில காங்., தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட கட்சியினர் வரவேற்றனர். இதையடுத்து, பெகுசாரி மாவட்டத்துக்கு ராகுல் சென்றார். அங்கு, 'புலம் பெயர்வதை நிறுத்து; வேலை கொடு' என்ற பெயரில், வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து, பாதயாத்திரையில் பங்கேற்றார். யாத்திரையை தொடர்ந்து பாட்னாவில், காங்., தலைமை அலுவலகத்துக்கு ராகுல் சென்று, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர், அங்கிருந்து புறப்பட்டதும் இரண்டு கோஷ்டிகளுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கட்சி அலுவலகத்தில் இருந்த காங்., - -எம்.பி., அகிலேஷ் பிரசாத் முன்பாகவே, கட்சியினர் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். கோபமடைந்த அவர், சண்டை போட்டவர்களில் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

'தவறுகளில் இருந்து பாடம் கற்போம்'

பீஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று 'அரசியலமைப்பை காப்போம்' என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:ஆர்வத்துடன் பணியாற்றவில்லை என்பதை, காங்.,கில் ஒப்புக் கொள்ளும் முதல் ஆளாக நான் இருக்கிறேன். நம் தவறுகளில் இருந்து பாடம் கற்று முன்னேறுவோம். முன்பு மாவட்ட காங்., தலைவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் உயர் ஜாதியினர். தற்போது, மூன்றில் இரண்டு பங்கு தலித் தலைவர்கள் உள்ளனர். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கு, பா.ஜ., எதிர்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

GoK
ஏப் 08, 2025 09:26

இதிலும் முட்டை போடுவார் என்று எதிர்பார்க்கலாம் ....சீக்கிரம் ஏதாவது கோழிப்பண்ணை இந்த ஆளை வாங்கினால் நிறைய முட்டைகள் கிடைக்கும் ...என்ன தொந்தரவென்றால் ரோம்ப கூவும்


அப்பாவி
ஏப் 08, 2025 09:07

இப்பிடி கோஷ்டி சண்டை போட்டுக்கிட்டிருந்தா உருப்படுமா?


V Venkatachalam
ஏப் 08, 2025 10:46

கண்டிப்பா உருப்படும். ஆமா கோஷ்டி சண்டை உருப்படும்.. நல்ல வேளை கையை காலை கடிக்கலை.. அது வரை விசேஷம்..


Nandakumar Naidu.
ஏப் 08, 2025 08:41

தேச விரோத, சமூக விரோத, ஹிந்து விரோத பாத யாத்திரையா?


S.V.Srinivasan
ஏப் 08, 2025 08:32

ராஹுல்லு பொழுது போகலேன்னா எங்கயாவது பாத யாத்திரை கிளம்பிடுவாரு. ஹி ஹி


ராமகிருஷ்ணன்
ஏப் 08, 2025 08:03

தமிழகத்தில் நடைபயணம் செய்து தமிழக பி ஜே பி யின் ஓட்டு சதவீதம் உயர்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.


Kasimani Baskaran
ஏப் 08, 2025 03:43

ஆர்.எஸ்.எஸ். போலவே உடை போட்டு மானத்தை வாங்குகிறார்கள் காங்கிரஸ் மட்டைகள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை