பகுதிநேர அரசியல்வாதி ராகுல்!
காங்கிரஸ் தலைவர் ராகுல், பகுதிநேர அரசியல்வாதி. தேர்தல் நேரத்தில் மட்டுமே வருவார். தேர்தல் நிறைவடைந்தால், நாட்டை விட்டு வெளியேறி விடுவார். ராகுல் போன்ற பகுதிநேர அரசியல்வாதிகளுக்கு, மேற்கு வங்கம் மற்றும் கேரள வாக்காளர்கள் உரிய தண்டனை அளிப்பர். - நிதின் நபின், செயல் தலைவர், பா.ஜ.,12 கோடி பேர் பாதிப்பு!
'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' சட்டத்தின் மூலம், ஊரகப் பகுதிகளில் 12 கோடி பேரின் வேலை பறிபோகும். உள்ளூர் நிர்வாகம் அளிக்கும் பணிகளை, இனி மத்திய அரசு ஒதுக்கும் என்பதால் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு குறைத்துள்ளது. - அபிஷேக் தத், செய்தி தொடர்பாளர், காங்.,அரசியல் ஆதாயம்!
டில்லியில் காற்று மாசு நீடிப்பதற்கு, முந்தைய ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி அரசின் அலட்சிய போக்கு தான் காரணம். 10 மாதங்களுக்கு முன் பொறுப்பேற்ற பா.ஜ., அரசு, சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதை அரசியல் ஆதாயங்களுக்காக ஆம் ஆத்மி முடக்க பார்க்கிறது. - வி.கே.சக்சேனா, டில்லி துணைநிலை கவர்னர்