உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களை ஏமாற்றும் ராகுல்!

மக்களை ஏமாற்றும் ராகுல்!

வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்தில், மக்களை சந்தித்து ஆறுதல் கூற ராகுல் செல்லவில்லை. கூட்டணி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை விட, சிறப்பாக புகைப்படம் எடுக்க அவர் செல்ல முயன்றார். இன்னும் எத்தனை நாளைக்கு ராகுல் மக்களை ஏமாற்றப் போகிறார்?சுதன்ஷு திரிவேதிபா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர்

பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அராஜகம்!

உத்தர பிரதேசத்தின் சம்பலில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் சென்றார். ஆனால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., சேர்ந்து, அரசியலமைப்பு சட்டத்தை கிழித்தெறிந்து அராஜகம் செய்கின்றன. மல்லிகார்ஜுன கார்கேதேசிய தலைவர், காங்.,

வருத்தம் அளிக்கிறது!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்காதது வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசின் இந்த செயலற்ற தன்மை, நாட்டுக்கும், நிலச்சரிவில் அனைத்தையும் இழந்தவர்களுக்கும் எதிர்மறையான செய்தியை அனுப்புகிறது.பிரியங்காலோக்சபா எம்.பி., - காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை