உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொய்களை பரப்புகிறார் ராகுல்; தேர்தல் ஆணையத்தில் பா.ஜ., புகார்

பொய்களை பரப்புகிறார் ராகுல்; தேர்தல் ஆணையத்தில் பா.ஜ., புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பொதுக்கூட்டங்களில் பொய்களை ராகுல் பரப்புகிறார். அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.மஹா., மற்றும் ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், தவறான தகவல்களை பரப்புவதாகவும், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் கூறியதாக, பா.ஜ., தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தலைமையிலான பா.ஜ., குழுவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் மனுவில், ' அரசியலமைப்பு சட்டத்தை நசுக்க பா.ஜ., விரும்புகிறது என ராகுல் பொய் சொல்கிறார்.பா.ஜ.,வின் கொள்கைகள் குறித்து தவறாக பேசும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் பொய்களை பரப்புவதை கண்டிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

பேசும் தமிழன்
நவ 12, 2024 22:05

பப்பு.... பொய்யிலே பிறந்து..... பொய்யிலே வளர்ந்த ஆள்.... அவர் உண்மையை பேசுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் ??


Mettai* Tamil
நவ 12, 2024 13:17

வைகுண்டு சார் , but he placed third, the Congress Party won. அப்ப அம்பேத்கரை காங்கிரஸ் தோற்கடித்தது உண்மை தானே ..அப்துல் கலாமுக்கும் அதே நிலைமை தானே .. ராஜிவ் காந்தியையே கொன்ற கூட்டம்... அந்த நிகழ்வில் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட போலீஸ் பொதுமக்கள் என 15 க்கும் பேற்பட்டோர் நிலைமையை கருத்தில் கொள்ளாமல் அந்த கூட்டத்தை, கொலை குற்றவாளிகளை மகன் மகள் மனைவி காங்கிரஸ் கட்சி காரங்க கூட்டணி ஆளுங்க என எல்லோரும் கட்டி பிடித்து சந்தோசத்தை வெளிப்படுத்திட்டு , அம்பேத்கர் பற்றிப் பேசலாமா,? என்று நீங்கள் கேட்பது வேடிக்கையாக உள்ளது ...


Ramesh Sargam
நவ 12, 2024 13:12

பொய்யைத்தவிர வேறு எதுவும் பேசத்தெரியாதப்பா அவருக்கு. ராகுலைப்போல தமிழகத்தில் அவர் தம்பி உதய நிதி இருக்கார். அவரும் அப்படித்தான்... பொய் மட்டும்தான் பேசுவார்.


வைகுண்டேஸ்வரன்
நவ 12, 2024 11:14

ராகுல் காந்தி இந்திய குடியுரிமை தான் பெற்றிருக்கிறார். இவர் பிறந்ததும் இந்தியாவில் தான். இவரது பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு, எலெக்ஷன் கார்டு எல்லாவற்றிலும் ராகுல் காந்தி, சன் ஆப் ராஜீவ் காந்தி என்று தான் இருக்கிறது. விடாப்பிடியாக அறிவற்ற தனமாக, தமிழ் நாட்டில் மட்டும் சில பாஜக ஆட்கள் ராவுல் வின்சி என்று எழுதி சுயசந்தோஷம் அடைக்கிறார்கள். இப்படி எழுதினா உடனே பாஜக வளர்ந்து விடுதாம். ஹா ஹா ஹா..


ஆரூர் ரங்
நவ 12, 2024 11:30

1.இங்கிலாந்தில் துவக்கப்பட்ட ஒரு கார்பரேட் நிறுவனத்தில் இணைந்தபோது இயக்குனர் படிவத்தில் தான் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் எனக் குறிப்பிட்டிருந்தார் என்கிறார் சுவாமி. 2. கல்லூரி ஆவணங்களில் ராவுல் வின்ஸி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அவரே மறுக்கவில்லை. 3.1980 வரை சோனியாவும் அவரது வாரிசுகளும் இத்தாலிய கடவுச்சீட்டு மட்டுமே வைத்திருந்தது அப்போதே வெளிவந்தது.


hari
நவ 12, 2024 11:50

ஹா.. ஹ.. ஹ் பாவம் முத்தி போச்சு...


enkeyem
நவ 12, 2024 15:22

வை குண்டு ஈஸ்வரா. கொடுத்த காசுக்கு ஓவராக கூவாதே. முரசொலி மட்டும் படித்து அவர்கள் திரித்து கூறும் செய்திகளை வைத்து கருத்து போட்டு நீதான் அதி புத்திசாலி என்று காட்ட நினைக்காதே. எதையும் தீவிரமாக அலசி ஆராயாமல் பதில் போடவேண்டாம். ராவுல் வின்சி என்பது அவருடைய இயற்பெயர் பியாங்கா என்பது ராவுளின் தங்கை பெயர். நீ எப்படி பெயரை மாற்றி கருத்து போடுகிறாயோ அப்படி இந்தியாவில் யார் வேண்டுமானாலும் தமது பெயரை மாற்றி வைத்துக்கொள்ள முடியும்.


SP
நவ 12, 2024 11:06

முதலில் இவர்களது முன்ஜாமினை ரத்து செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டு்ம்.


Anand
நவ 12, 2024 10:30

உண்மையான பெயர் ரவுல் வின்சி என சுப்பிரமணியன் சுவாமி கூறுகிறார், அந்நிய குடியுரிமை பெற்றுள்ளவன் என சொல்லப்படுகிறது, போதாக்குறைக்கு நேஷனல் ஹெரால்டு கேசில் முக்கிய குற்றவாளி தற்போது ஜாமீனில் உள்ளவன் என அவனே ஒரு பொய்யும் புரட்டிர்க்கும் பெயர் போனவர்


VENKATASUBRAMANIAN
நவ 12, 2024 09:31

சோனியா ராகுல் பிரியங்கா ராபர்ட் இன்னும் சிலர் பெயிலில் உள்ளார்கள். நடவடிக்கை எடுக்காமல் எப்படி பெயில். நமது சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தி அபிஷேக் கபிலசிபில போன்ற வக்கீல்களை வைத்து வாய்தா வாங்கி வருகிறார்கள் இதுபோல் தமிழ்நாட்டிலும் உள்ளார்கள்.


GMM
நவ 12, 2024 08:48

அரசியல் சட்டத்தை நசுக்க பிஜேபி விரும்புகிறது என்பது அவதூறு. ? ராகுல் அதிகம் தவறாக பேசி வரும் அரசியல் தலைவர். தவறாக பேசும் ராகுல், கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சி மீது என்ன நடவடிக்கை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று பிஜேபி கூறுவது உதவும். தேர்தல் ஆணையம் தலைமை ஆசிரியர். கட்சிகள் மாணவர்கள். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.


Indian
நவ 12, 2024 08:48

பதினைந்து லச்சம் எல்லாரோட வாங்கி கணக்குல வரும் என்று சொன்ன பொய்க்கு ஏதவது தண்டனை உண்டா ??


hariharan
நவ 12, 2024 08:35

10 வருடமாக ஊழல்வாதிகள்மேல் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என ஒருவர் பொய் சொல்லி ஓட்டு வாங்கியிருக்கிறாரே. இதற்கும் நடவடிக்கை உண்டா?


Nandakumar Naidu.
நவ 12, 2024 09:50

கைது செய்து சிறையில் அடைத்த ஊழல் வாதிகளை ஜாமினில் விட்டுக்கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தை கேளுங்கள் ஐயா. உழல் வாதிகளுக்கு துணை போகும் 30 கும் மேற்பட்ட இண்டி கூட்டணி என்ற அரசியல் வாதிகளுக்கு வாக்களிக்கும் மடையர்கள் உள்ளவரை ஊழலை ஒழிக்க முடியாது. திருந்த வேண்டியது மக்கள் தான்.


Mettai* Tamil
நவ 12, 2024 10:32

முதலில் மக்களும் ஊழல் பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதையும், ஊழல் அரசியல் வாதிகளை ஆதரிப்பதையும் நிறுத்த வேண்டும் .. நான் அரசு வேலை வாங்கித்தருவதாக லஞ்சம் வாங்கினேன் என்று கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்த அரசியல் வாதிக்கு மக்களும் ஆதரவாக இருந்ததும் , தொட்டு பார் தொடாம பார் என்று வீர வசனம் பேசியதும் தெரியாதா ?? ஊரே கூடி ஊழலை மறைத்தால் எப்படி ஆதாரம் வெளியில் வரும் .??


முக்கிய வீடியோ