உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திரும்பத் திரும்ப பழி சுமத்தும் ராகுல்; அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது தேர்தல் கமிஷன்!

திரும்பத் திரும்ப பழி சுமத்தும் ராகுல்; அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது தேர்தல் கமிஷன்!

புதுடில்லி: ஓட்டுக்கள் திருடப்படுகிறது என மீண்டும் மீண்டும் பழி சுமத்தி வரும் ராகுலுக்கு, தேர்தல் கமிஷன் கடும் பதிலடி கொடுத்துள்ளது.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இருந்தே, தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். குறிப்பாக, ஓட்டுக்கள் திருடப்படுகிறது. என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறி வருகிறார். தற்போது அவர் பீஹார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி, அவர் மஹாராஷ்டிராவை போல் பீஹாரிலும் தேர்தல் முறைகேடு நடப்பதாக பலமுறை குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ராகுலுக்கு தேர்தல் கமிஷன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:1. தேர்தல் கமிஷன் ராகுலுக்கு ஜூன் 12ம் தேதி, 2025ம் ஆண்டு அன்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியது. அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. 2. தேர்தல் கமிஷன் ஜூன் 12ம் தேதி, 2025ம் ஆண்டு அன்று அவருக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதற்கு அவர் பதில் அளிக்காது ஏன்?3. எந்தவொரு பிரச்னை குறித்தும் அவர் தேர்தல் கமிஷனுக்கு ஏன் எந்த கடிதமும் அனுப்பவில்லை. 4. அவர் போலி குற்றச்சாட்டுகளை கூறி வருவது மிகவும் விசித்திரமானது, மேலும் இப்போது தேர்தல் கமிஷனையும், அதில் பணியாற்றுபவர்களையும் அச்சுறுத்தத் தொடங்கி உள்ளார். இது வருந்தத்தக்கது.5. தேர்தல் கமிஷன் இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை (போலி குற்றச்சாட்டுகள்) புறக்கணித்து விட்டு, தேர்தல் கமிஷனில் பணியாற்றும் அனைவரும் பாரபட்சமின்றி வெளிப்படையாக தொடர்ந்து செயல்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

பேசும் தமிழன்
ஆக 02, 2025 08:19

அட பப்பு... நீ தான் பெரிய அறிவாளி ஆயிற்றே.... தேர்தல் ஆணையம் ஓட்டு பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று நிரூபித்தால்.... அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்த போது..... நீ எங்கே போய் இருந்தாய்.... கோமாவில் இருந்தாயா ??..... உனக்கு தெரியாத தில்லுமுல்லு வேலையா.... நிரூபித்து காட்ட வேண்டியது தானே.... உன்னை யார் தடுத்தது ???


SP
ஆக 02, 2025 07:48

இவரின் பின்னணியை தீவிரமாக கண்காணித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இந்தியாவிற்கு மிகப்பெரிய சாபக்கேடு காங்கிரசும் ராகுலும். இன்னமும் இவரை பேச விட்டுக் கொண்டிருப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல


J. Vensuslaus
ஆக 02, 2025 02:17

ஜனநாயகத்தின் ஜீவநாடியே தேர்தல் ஆணையம்தான். சுதந்தரமாக, ஆளும்கட்சியின் தலையீடுகளை அனுமதிக்காமல் நடுநிலையுடுன் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முனைப்பில் இயங்கும் ராகுல் காந்தி அவர்களின் கருத்துக்களை தேர்தல் ஆணையம் அலட்சியம் செய்யக்கூடாது. இந்திய தேர்தல் ஆணையத்தின் பணி அதிமுக்கியமானது, மகத்தானது. அதை மனதிற்கொண்டு இயங்க வேண்டும்.தேர்தல் ஆணையம் தோற்றால் இந்திய ஜனநாயகம் தோற்கும். மக்களாட்சி மறையும், சர்வாதிகாரம் தலைதூக்கும்.


vadivelu
ஆக 02, 2025 07:11

இந்த கருத்து சொல்லும் நீங்கள் ஏன் கோர்ட்டில் ஒரு மனு கொடுக்க கூடாது.


Kulandai kannan
ஆக 01, 2025 23:05

ராகுல், மம்தா போன்ற அரசியல்வாதிகள் ஜனநாயகத்திற்கு தகுதியானவர்கள் இல்லை.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 01, 2025 22:26

29 முறை டிரம்ப் இவரிடம் கூறியதற்கு இவர் ஒரு முறை கூட டிரம்ப் இடம் அதற்கான ஆதாரத்தை கேட்க வில்லை. தன்னிடம் ஆதாரம் உள்ளது உள்ளது என்று கூறுவது நீட் இரகசியம் உள்ளது என்று கூறுவது போன்று தான். இனம் இனத்தோடு தானே சேரும்.


Suppan
ஆக 01, 2025 21:44

கர்நாடகாவிலோ ஹிமாச்சல் பிரதேஷிலோ தெலங்கானாவிலோ இந்தக்குற்றச்சாட்டை கூறவில்லையே? இந்த மாநிலங்களில் தில்லு முல்லு செய்துதான் காங்கிரஸ் வென்றதா? இந்த ஆசாமி வரப்போகும் தேர்தல்களில் அடையப்போகும் தோல்விகளுக்கு இப்பொழுதிலிருந்தே சாக்கு சொல்ல ஆரம்பித்திருக்கிறார்


panneer selvam
ஆக 01, 2025 21:25

It is the Dravidian Concept like claiming Tamilnadu is the best among all the countries in the world . Just look around how AP , Telangana , Karnataka , Maharashtra , Gujarat even UP are marching ahead in Industrial growth while Tamilnadu is lagging for the last 30 years .


Nagarajan D
ஆக 01, 2025 21:08

இவரை நம்ம வாய்தா மன்றங்கள் தண்டிக்க என்ன தடை? இவரை எதிர் கட்சி தலைவன் என்று வேறு நியமித்துள்ளார்கள். இவரை தலைவனாக கொண்டுள்ள அந்த கூட்டம் எப்படி இவர் தலைமையில் எப்படி என்ன செயல் செய்யும்? காந்தி என்ற பெயர் உடைய எவருமே பாரதத்திற்கு எதிராகவே இருக்கானுங்க


rajasekaran
ஆக 01, 2025 21:04

ராகுல் காந்தி மேல் ஏன் தேர்தல் கமிஷன் வழக்கு தொடர கூடாது.


Ramesh Sargam
ஆக 01, 2025 20:59

ஒரு பொய்யையே திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று ஒரு சிலர் நினைப்பார்கள். என்றைக்கும் பொய் பொய்தான். ராகுலுக்கு அந்த உண்மை என்று புரியுமோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை