உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி., சிறப்பு கூட்டம் நடத்த பிரதமருக்கு ராகுல் எம்.பி., கடிதம்

பார்லி., சிறப்பு கூட்டம் நடத்த பிரதமருக்கு ராகுல் எம்.பி., கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்து விவாதிக்க பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., - எம்.பி.,யுமான ராகுல் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய சூழலில், போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம் மாலை வெளியானது. இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதலில் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதையடுத்து, நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, 'மாலை 5:00 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது' என, அறிவித்தார். இந்நிலையில், போர் தொடர்பாகவும், அமெரிக்க அதிபரின் தலையீடு குறித்தும் விவாதிக்க பார்லி., சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல் எழுதிய கடிதம்: பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் ஒருமனதான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆப்பரேஷன் சிந்துார் மற்றும் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை பற்றி விவாதிப்பது மிகவும் முக்கியம். இது வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், நம் கூட்டுத்தீர்மானத்தை நிரூபிக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த கோரிக்கையை நீங்கள் தீவிரமாகவும், விரைவாகவும் பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கருத்தை வலியுறுத்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்து கட்சி கூட்டம்

காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ''இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடுநிலையாக இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபி கூறியுள்ளது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ''சிம்லா ஒப்பந்தத்தை நாம் கைவிட்டுவிட்டோமா? மூன்றாம் தரப்பு மத்தியஸ்திற்கான கதவுகளை நாம் திறந்துவிட்டோமா என்ன? ஆப்பரேஷன் சிந்துார் குறித்தும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்தும் விவாதிக்க பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankaranarayanan
மே 12, 2025 10:20

போர் தொடர்பாகவும், அமெரிக்க அதிபரின் தலையீடு குறித்தும் விவாதிக்க பார்லி., சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார். இன்னும் போர் முற்றிலும் நின்றபாடில்லை அதற்குள் போர் பற்றிய அறிக்கை விடவேண்டுமாம் பார்லிமெண்டு கூட்ட வேண்டுமாம் கூடி இவர்கள் என்ன செய்வார்கள் முந்தய காலங்களில் இவருடைய தாத்தா பாட்டி செய்த திருவிளையாட்டுகளால் இப்போது தவிப்பது நாம் தான்


Mecca Shivan
மே 12, 2025 08:04

இவனும் பாகிஸ்தானும் ஒன்று ..வாலை நிமிர்த்தமுடியாத ஜென்மங்கள்


Kasimani Baskaran
மே 12, 2025 05:34

ஆகஸ்ட் 8, 2008 ல் ராகுல், சோனியா, மன்மோகன் மற்றும் சி ஜின் பிங் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி இந்தியாவின் தகவல்களை பரிமாற்றிக்கொள்ள தனிப்பட்ட ஒப்பந்தம் ஒன்று போட்டது. அதன் சரத்துக்கள் யாருக்கும் தெரியாது. இந்தியாவின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியாக இருந்துள்ள காங்கிரஸ் இப்படி நேரடியான தேசவிரோத காரியங்கள் செய்திருக்கிறது. இதன் அடிப்படையில்தான் இன்றும் கேள்வி கேட்டு சீன எஜமானர்களுக்கு தகவல் கொடுக்க முனைகிறது. ஆகவே இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ள ராகுல் கைது செய்து நிரந்தரமாக சிறையில் இருக்கவேண்டியவர்.


அஜய் இந்தியன்
மே 12, 2025 01:55

ராகுல் காந்தி அரசியல் செய்ய பார்லிமென்ட் ஒன்றும் விளையாட்டு மைதானம் இல்லை. மக்களுக்கு சேவை செய்யதான் அரசு உள்ளது, இதில் உள்ள பதவிகளில் இருப்பவர்கள் மக்களுக்கு சேவை தான் செய்ய வேண்டும் தவிர....அரசியல் நாடகம் நடத்தி கொண்டு இருக்க கூடாது. இதை கொஞ்சம் ராகுல் காந்தி விற்க்கு சொல்லி கொடுக்க வேண்டும்.


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
மே 12, 2025 01:49

ராகுல் எம்பி வாரணாசி எம் பிக்கு கடிதம் அப்படி கூட தலைப்பு வைத்து இருக்கலாம்


muthuvel
மே 12, 2025 01:32

முதலில் இவர்களை சுட்டுக் கொள்ளுமாறு ராணுவத்தை கேட்டுக்கொள்கிறோம் இவர்கள் உள்ளே இருக்கும் வைரஸ் போன்ற கொடிய கிருமிகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை