உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் கும்பமேளாவிற்கு செல்லாதது ஏன்: ராபர்ட் வாத்ரா சொல்வது இதுதான்

ராகுல் கும்பமேளாவிற்கு செல்லாதது ஏன்: ராபர்ட் வாத்ரா சொல்வது இதுதான்

புதுடில்லி: பிரயாக்ராஜ் நகரில் நடந்த மஹா கும்பமேளாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்காதது குறித்து, அவரது தங்கை கணவர் ராபர்ட் வாத்ரா விளக்கம் அளித்து உள்ளார்.இது தொடர்பாக ராபர்ட் வாத்ரா கூறியதாவது: நாங்கள் மஹா கும்பமேளாவிற்கு சென்றால், விஐபி ஏற்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதுடன், இடையூறு ஏற்படும். நாங்கள் எந்த நேரமும் அங்கு செல்லலாம். விளம்பரத்திற்காக எதையும் செய்ய விரும்பவில்லை. நாங்கள் எவ்வளவு மதசார்பற்றவர்கள் என்பதை காட்ட வேண்டியது இல்லை.மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காகவும், அரசியலுக்காகவும் மத ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பது எனது நம்பிக்கை. எனவே, மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக வழிபாட்டு தலங்களுக்கு ராகுல் செல்ல வேண்டியது இல்லை. புனித இடங்களுக்கு ராகுல் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வாய்மையே வெல்லும்
மார் 27, 2025 22:36

ராகுல் நடிகன் .. ராபர்டு மகா நடிகன்.. ஓரமாக போயிட்டு ரீல் விடுங்க சார் .. நம்பிட்டோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை