உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் - தேஜஸ்வி கூட்டணி பேச்சு

ராகுல் - தேஜஸ்வி கூட்டணி பேச்சு

புதுடில்லி : பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு, இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு ஆறு மாதங்கள் உள்ள நிலையில், தற்போதே பீஹாரில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், டில்லியில் நேற்று, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் உள்ளிட்டோரை, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் சந்தித்து பேசினார். அப்போது, பீஹார் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள், தொகுதி பங்கீடு, பிரசார திட்டங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ''பீஹார் தேர்தலில், 'இண்டி' கூட்டணி நிச்சயம் வெல்லும். முதல்வர் வேட்பாளர் குறித்து, ஊடகங்கள் கவலைப்பட வேண்டாம். முதல்வர் குறித்து பேசி முடிவு எடுப்போம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை